தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது என மக்கள் சொல்ல வேண்டும். அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் கூறி வருவது, 16 வயதினிலே படத்தில் வரும் சப்பானி கதாபாத்திரம் தனது பெயர் கோபாலகிருஷ்ணன் என்று கூறிக்கொள்வது போலிருக்கிறது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
Nobel Prize 2024: பொருளாதாரத்துக்கான நோபல் 3 பேருக்குக் கூட்டாக அறிவிப்பு; யாருக்கு ஏன்?
தேனி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வளர்ச்சிப் பணிகள் குறித்து பெரியகுளம் நகர செயல்வீரர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பெரியகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயரத்த நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான்.
கொட்டப்போகும் கனமழை; 180 வெள்ள அபாய பகுதிகள்- சென்னை மாநகராட்சி முக்கிய உத்தரவு
அதோடு முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக்-கிற்கு பெருமை சேர்க்கும் வகையில், தேனி மாவட்டம் லோயர் கேம்ப்-ல் மணிமண்டபம் அமைந்ததும் ஜெயலலிதா ஆட்சியில் தான். ஆனால் லண்டனில் உள்ள பென்னி குயிக் -ன் கல்லறையை புதுப்பித்து பராமரிப்பு செய்கிறோம் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசு அதற்காக ஒரு சிறு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை என்பதை நான் லண்டன் சென்றபோது கண்டேன் என்றார்.
TN Rain Alert : “எந்தெந்த மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும்” இதோ லிஸ்ட் – மக்களே எச்சரிக்கை..!
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது என்று இங்குள்ள அமைச்சர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் தான் கூறிக் கொள்கிறார்கள். ஆனால் நல்லாட்சி என்று மக்கள் தான் கூற வேண்டும். மக்கள் யாரும் சொல்லவில்லை. இது 16 வயதினிலே படத்தில் வரும் சப்பானி கதாபாத்திரம், தனது பெயர் கோபாலகிருஷ்ணன் என்றும் அதைச் சொல்லி கூப்பிடுமாறுக் கேட்டுக் கொண்டும் யாரும் அவ்வாறு அழைக்க மாட்டார்கள். அது போல நல்லாட்சி என மக்கள் யாரும் சொல்லாததால் சப்பானி ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது என்று விமர்சனம் செய்தார்.