பேரறிஞர் அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி மதுரை மாநகர் அ.தி.மு.க., சார்பில் மதுரை கோ.புதூர் பேருந்துநிலையம் பகுதியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அதிமுக தலைமைக் கழகப்பேச்சாளர் V.P.B.பரமசிவம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது செல்லூர் ராஜூ பேசுகையில், “உலகில் 7-வது பெரிய கட்சி அதிமுக, ஆசிய கண்டத்தில் 3-வது பெரிய கட்சிதான் அதிமுக. ஆனால் கலைஞர் அதிமுக புரட்சித் தலைவர் துவங்கும்போது கிண்டல் செய்தார், இந்த கட்சி இருக்காது என்று. தற்போது மிகப்பெரும் இயக்கமாக வளர்ந்து நிற்கிறது.
செல்லூர் ராஜூ அவர்கள் பேசிய முந்தைய செய்தி படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அண்ணாவை பற்றி தவறாக பேசினால் நாக்கு அழுகிவிடும், நாக்கு துண்டாக்கப்படும் - செல்லூர் ராஜூ ஆவேசம்
இன்பநிதி வந்தால்கூட அதிமுகவை அசைக்கமுடியாது. மதுரையின் வளர்ச்சிக்கு அதிமுக முக்கிய பங்கு வகித்துள்ளது. மதுரையில் இன்னும் 50 ஆண்டிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் எடப்பாடியார் திட்டம் தீட்டியுள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரையில் பல்வேறு பாலங்களை கொண்டுவந்துள்ளார். தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறைத்துக் கொடுத்தார். இப்படி பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ளார். காவிரி பிரச்னை தீர்ப்பது யார்? டெல்டாக்காரன் என்று ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் விவசாய நிலங்கள் கருகுகிறது. காவிரி நீருக்காக ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் சண்டையிட திராணி இருக்கா? 50 லட்சம் மக்கள் கூடி வரலாறு சாதனை படைத்துள்ளது மதுரை அதிமுக பொன்விழா மாநாடு. மோடிஜியே அதனை வியந்து பார்த்துள்ளார். ஈ.டி., ரைடால் தமிழக முதல்வர் தூங்குகிறாரோ என்று தெரியவில்லை. தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இரண்டரை ஆண்டில் 3 லட்சம் கடன் வாங்கியுள்ளார் முதல்வர்". என்று திமுகவை கடுமையாக சாடினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தனது தொகுதியை புறக்கணித்தால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய தயங்க மாட்டேன் - ஆர்.பி.உதயகுமார்
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Police Suicide: "நான் போறேன் மா..." ஆவடி ஆயுதப்படை காவலர் சேலத்தில் தற்கொலை... தாய்க்கு உருக்கமான கடிதம்..!