சவுக்குசங்கர் மீதான குண்டாஸ் வழக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தனியார் விடுதியில் கைது
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே தேனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தார். அப்போது அவரை கைது செய்ய வந்த கோவை போலீசாருக்கு உதவியாக தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாக்கியம் என்பவர் உடன் சென்றுள்ளார். இதையடுத்து பெண் என்றும் பாராமல், சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியதோடு கீழே தள்ளியுள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட 2.5 கிலோ கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் ஆகியோருக்கு கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சவுக்கு சங்கர் ஜாமீன் மனு
இந்நிலையில், இந்த வழக்கில் சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவானது இன்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கூறி குறிஞ்சியர் பெண்கள் ஜனநாயக பேரவை பவானி என்பவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏற்ற நிலையில் சவுக்குசங்கர் தனது ஜாமின் மனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது. சவுக்குசங்கர் மீதான குண்டாஸ் வழக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - IND vs PAK T20 World Cup 2024: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா..? ISIS-இல் இருந்து வந்த தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை!?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TTF Vasan : செல்போனில் பேசியபடி காரை ஓட்டி அஜாக்கிரதை.. டி.டி.எஃப் வாசன் மதுரையில் கைது