நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி அரசு அதிகாரிகளின் ஆதரவோடு இரவு பகலாக பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான ஆற்று மணலை கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், மணல் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த நடகோட்டை, சித்தர்கள்நத்தம், அணைப்பட்டி வழியாக செல்லும் வைகை ஆற்றில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஆற்று மணல் கொள்ளை காரணமாக ஆற்றில் நீர்ப்பிடிப்பு தன்மை குறைந்து, நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி நதிகள் பாதுகாப்பு நலச்சங்கம் மற்றும் வைகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு, நீதிமன்ற ஆணையர் தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு செய்து அப்பகுதி வைகை ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதித்தனர்,


AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் வைகை ஆற்றில் மணல் கொள்ளை துவங்கிய நிலையில், கடந்த சில வாரங்களாக நீதிமன்றம் தடை விதித்த அதே பகுதிகளான அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம் பகுதி வைகையாற்றில் காவல்துறையினர், வருவாய்த் துறையினர், பொதுப்பணி துறையினர் ஆதரவோடு இராட்சச ஹிட்டாச்சி இயந்திரங்கள் மூலம்  ஆற்றுக்குள்ளே 20-30 அடி ஆலம் வரை மணலை அள்ளி குவாரி போல் குவித்து 50-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் பல நூறு கோடி மதிப்பிலான மணலை இரவு பகலாக கொள்ளையடித்து விற்பனை செய்து வருகின்றனர்.


கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்


இதனால் நிலக்கோட்டை, சின்னாளப்பட்டி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 20-க்கும் மேற்பட்ட குடிநீர் உறைகிணறுகள் சாய்ந்து கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாயம் நிறைந்த அப்பகுதியில் ஆற்றின் நீர்ப்பிடிப்பு தன்மை முற்றிலும் குறைந்து நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு  செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது,மேலும்  வெள்ளப்பெருக்கு காலங்களில்  அப்பகுதியில் ஆற்றின் திசை மாறி பல கிராமங்களுக்கும் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நீதிமன்ற உத்தரவையும் மீறி வைகை ஆற்றில் நடைபெறும்  மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி மணல் மாஃபியாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.