”இங்கே ஜனநாயகத்தின் குரல்வலையை நினைக்கின்ற வகையிலே ஹிட்லர் முசோலினி மறுவடிவமாக ஸ்டாலின் உள்ளார்”.
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்...,” தமிழகம் சுடுகாடாக மாறி இருக்கிற ஒரு அவல நிலையை நாம் பார்க்கிற பொழுது, நெஞ்சை உறைய வைக்கின்ற கள்ளச்சாராயம் உயிர்பலி நம் கண்களிலே கண்ணீரை வரவழைத்து வற்றிப் போய் விட்டது. தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி உள்ள இந்த கள்ளச்சாராயம் பலிக்கு எல்லோரும் கேட்கிற ஒரே கேள்வி இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?. கடந்த ஆண்டிலேயே விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலே கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் பலியானார்கள், அதேபோல செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 8 பேர் உயிரிழந்தார். இந்த சோக சுவடு இந்த சோகத்தின் ஈரம் காய்ம் மறைவதற்குள்ளாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் 57 பேர் பலியாகி 156 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். நெஞ்சை உருக்கும் சம்பவத்தை பற்றி சட்டசபையில் விவாதிப்பதற்கு அனுமதி தாருங்கள் பேரவை தலைவரிடம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஜனநாயகத்தினுடைய உரிமையின் அடிப்படையிலே கடமையாற்றுவதற்கு கேள்வி எழுப்புகிறார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. கள்ளச்சாராயத்திற்கு துணை போனவர்களை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய, இந்த அரசு அவர்களை மயிலிறகால் தடவி கொடுத்து விட்டு, இங்கே ஜனநாயகத்தின் குரல்வலையை நினைக்கின்ற வகையிலே ஹிட்லர் முசோலினி மறுவடிவமாக ஸ்டாலின் உள்ளார்.
பழைய அறிக்கை
அரசின் அலட்சியத்தாலே தமிழ்நாடு தற்போது சுடுகாடாக இருக்கிறது., என்கிற செய்தி, மக்களுக்கு போய் விடக்கூடாது என்பதற்காகவும், குறைந்தபட்சம் பாதிக்கப்பட்டு மக்களுக்கு ஆறுதல் சொல்லவாவது முதல்வர் சென்று இருக்க வேண்டமா?. இந்த செய்தி மக்களுக்கு சென்றடைய கூடாது என்பதற்காகவும், திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. மக்களின் உயிரைப் பறித்து இருக்கிற சென்று விடும் என்பதற்காக தான் மறுக்கப்பட்டு இருக்கிறது. கடந்தாண்டு இதேபோன்று செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலே 23 பேர்கள் கள்ளச்சராயத்தால் இறந்த பின்பு ஏதேனும் நடவடிக்கை எடுத்து இருக்கிறதா? அப்படி எடுத்து இருந்தால் இந்த கள்ளக்குறிச்சியில் இந்த சோகம் நிகழ்ந்திருக்காது. மூன்றாண்டு காலமாக கும்பகர்ண தூக்கத்தில் தூங்கி வழிந்து கொண்டிருக்கிற இந்த அரசு கடந்த ஆண்டு என்ன அறிக்கை கொடுத்தார்களோ அதே அறிக்கையினுடைய ஜெராக்ஸ் நகலாக தான் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்ய வேண்டும்
சி.பி.ஐ விசாரணை உடனடியாக உத்தரவிட வேண்டும். இதை மறுக்கிற ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். என்ற மக்களின் கோரிக்கையை செவிமடுத்து கேட்பாரா முதல்வர். ஏனென்றால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சொல்லவில்லை, ஏனென்றால் அவருடைய மனசாட்சியை உறுத்துகிறது. கண் கெட்ட பிறகுசூரிய நமஸ்காரம் என்று சொல்வார்கள் 57பேர் இறந்து போய் பிறகு அதிகாரிகளை மாற்றுகிறார்கள். வயிற்று வலியாக இறந்து போனார்கள் என்று முட்டு கொடுக்கிற மாவட்ட ஆட்சித் தலைவர் இதுவரை தமிழ்நாடு கண்டதில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் காப்பாற்றுவதற்கு இடமாற்றம் செய்திருக்கிறார். என கூறினார். கிராமத்தில் சொல்லுவார்கள் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். அதே போல் முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் உடனடியாக அவருடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறினார்.