மதுரை மீனாட்சி பஜாரில் குப்பை தொட்டிகள் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதித்த மதுரை மாநகராட்சி
மத்திய, மாநில அரசுகள் குப்பைகள் சேகரித்து முறையாக அதை சுத்திகரிப்பது தொடர்பாக மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மாநகராட்சிகளில் குப்பை சேகரிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் குப்பையின் ஆபத்துகள் குறித்த உணர்ந்த பலரும் அலட்சியமாக குப்பை கொட்டுவதை தவிர்ப்பதில்லை. இந்நிலையில் மதுரை மீனாட்சி பஜார் பகுதியில் அனைத்து கடைகளிலும் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்தும் கடைகளுக்கு முன்பு மூடிய நிலையில் உள்ள குப்பை தொட்டிகள் வைக்காத கடைகளுக்கு முதற்கட்டமாக 200 ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த செயலை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
மதுரை மாநகரில் ரயில்வே நிலையம் அருகே மொபைல், டிவி, எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய மீனாட்சி பஜார் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300 கடைகள் செயல்பட்டுவருகிறது. இங்கு செல்போன் விற்பனை கடைகளோடு, உதிரி பாகங்கள் விற்பனை மற்றும் செல்போன் பழுது நீக்கும் கடைகள் மற்றும் எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள், துணி வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடைகளின் முன்பாக அதிகளவிற்கு குப்பைகள் சேரும்போது அதனை சாலைகளில் கொட்டுவதால் அதனை அகற்றுவதில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இந்நிலையில் அனைத்து கடைகளிலும் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டு ஒரு வார காலம் அவகாசம் கொடுத்தும் கடைகளுக்கு முன்பு மூடிய நிலையில் உள்ள குப்பை தொட்டிகள் வைக்காத கடைகளுக்கு முதற்கட்டமாக 200 ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator