தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக மதுரை அரசு மருத்துவமனை உள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர்,ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் என பல மாவட்ட மக்களுக்கு முக்கிய மருத்துவமனையாக உள்ளது.


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்த  விவகாரத்தில் மகப்பேறு சிகிச்சை மையத்திற்கு அத்துமீறி நுழைந்த மாநகராட்சி சுகாதார அலுவலரை பணியிடை நீக்கம் செய்ய கோரி அரசு மருத்துவர்கள் 5-வது நாளாக கருப்பு பேட்ஜ் அணிந்தவாறுஅனைத்து அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை, குடும்ப நல அறுவை சிகிச்சை உட்பட (Elective Surgeries), இதர ப்ரொசீஜர்கள் (all scopies, Elective Coronory angiogram, interventional procedures)  நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  இந்நிலையில் நேற்றிரவு சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் அரசு மருத்துவகல்வி இயக்குநர் தலைமையில்  சென்னையில் அரசு மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.


மேலும் மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்மதுரை கோரிப்பாளையத்தில் தர்ஹா சந்தனக் கூடு விழா கோலாகலம்; மதவேறுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்பு



6வது நாள் போராட்டம்:


இதன் காரணமாக 6வது நாளாக இன்றும் அரசு மருத்துவர்கள் போராட்டம் நீடித்து வருவதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு  எலும்புகள் உடைந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யாத நிலையில் கடும் வலியுடன் 6 நாட்களாக  நோயாளிகள் காத்திருக்கின்றனர். அரசு மருத்துவர்கள் போராட்டத்தால் அவசரமல்லாத சிகிச்சை செய்யப்படாத நிலையில் வெளியூர்களில் இருந்துவந்து சிகிச்சை பெறும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலியாக இன்று மதியம் அரசு மருத்துவர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கவுள்ளனர்.




நோயாளிகள் அவதி:


அரசு மருத்துவர்கள் மாநகராட்சி சுகாதாரத்துறை இடையே நிலவும் மோதல் போக்கால் நோயாளிகளும் சிகிச்சை கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இந்த பிரச்னை தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.