ஐயப்ப பக்தர்களுக்கு கவலை வேண்டாம்! பிஎஸ்என்எல் கொடுத்த ஜாக்பாட்.. சபரிமலையில் 4ஜி

BSNL சார்பில் இலவச வைபை வசதி அளிக்கப்பட்டு வரும் நிலையில். தற்போது 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பத்தினம் திட்டா மாவட்டத்திலேயே முதல் 4ஜி தளமாக சபரிமலை உருவெடுத்துள்ளது.

Continues below advertisement

கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு பூஜைக்காக 41நாள்கள் நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வருகை வந்து செல்கின்றனர்.

Continues below advertisement


சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நிறைவடைந்து தற்போது மகரவிளக்கு சீசன் நடைபெற்று வருகிறது. ஜனவரி 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதனால் சாமி ஐயப்ப தரிசனத்திற்காக  சபரிமலையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.  ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. 

இதையும் படிங்க : WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்

சபரிமலை ஐயப்பன் கோவில் மிகுந்த அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால், போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு  வசதிகள் குறைந்தே இருந்து வந்தது. நவீன கால தொடக்கத்திலிருந்து வனப்பகுதிகளில் செல்வதற்கும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோயில் மற்றும் கேரள அரசின் நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு நடை பயணமாக செல்லும் சூழல் உள்ளதால் செல்போன் இணைப்புகளுக்கான சிக்னல் வசதிகள் பெரும்பாலும் இல்லாத நிலையே தற்போது வரையில் உள்ளது.


பம்பையிலிருந்து செல்லும் பக்தர்களும் சரி, வண்டிப்பெரியார் சென்று பெரும்பாதை காட்டுப்பகுதியிலிருந்து செல்லும் பக்தர்களும் சரி தாங்கள் பெரிதும் சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்னையாக இருக்க கூடியது  தகவல் தொடர் வசதி. அடர்ந்த வனப்பகுதி என்பதால் தனியார் செல்போன் டவர்கள் இருப்பதில் வாய்ப்பு இல்லாததால்  BSNL செல்போன் டவர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் செல்போன் சிக்னல்கள் சரி வர எடுப்பதில்லை. இந்நிலையில்  சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 4ஜி சேவையை BSNL நிர்வாகம் சார்பில் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. சபரிமலையில் குழுவாக செல்பவர்கள் பிரிந்து சென்றாலோ அல்லது ஏதேனும் அவசர உதவிக்கு தேவைப்பட்டு குழுவில் தங்களுடன் வந்தவர்களை தொடர்பு கொள்வது, போன்றவற்றில் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

இதையும் படிங்க : Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க


சில ஆண்டுகளாக BSNL சார்பில் இலவச வைபை வசதி அளிக்கப்பட்டு வரும் நிலையில். தற்போது 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பத்தினம் திட்டா மாவட்டத்திலேயே முதல் 4ஜி தளமாக சபரிமலை உருவெடுத்துள்ளது. இது மகர விளக்கு பூஜைக் காலத்தில் உதவியாக இருக்கும் எனவும் இந்த இணைய சேவைகளின் நிதியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

Continues below advertisement