தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் கஞ்சா வழக்குகளில் 533 கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 54 பேர் மீது குண்ட சட்டம் பாய்ந்தது.


தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் போதை பொருட்கள் கடத்தல் விற்பனையை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்  நிர்வாகம் சார்பில் கூறுகையில், தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கடத்தலை தடுக்கவும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவும், தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் பேரிலும் சிறப்பு தனிப்படைகள் அமைத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.



கஞ்சா விற்பனை செய்பவர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு விற்பனை செய்ய மொத்தமாக கடத்தி வந்தவர்கள் அவர்களுக்கு ஆந்திராவில் இருந்தபடியே வாங்கிக் கொடுத்தவர்கள் மற்றும் விளைவித்து கொடுத்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டு மட்டும் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


இந்த வழக்குகளில் 533 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து 528 கிலோ கஞ்சா, நூறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் கடந்த ஆண்டு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 95 பேர் மீது கொண்ட தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.


இதையும் படிங்க: Pongal Parisu Thoguppu 2025: இந்த பொங்கலுக்கு எத்தனை குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு தெரியுமா...?


அதில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் மட்டும் 54 பேர். இந்த எண்ணிக்கை கடந்த 2023 ஆண்டை விட அதிகம். 2023 ஆம் ஆண்டில் 166 கஞ்சா வளர்ப்புகளில் 335 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1510 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர். அதில் ஆண்டிபட்டி பகுதியில் ஒரே வழக்கில் பறிமுதல் செய்த 1200 கிலோவும் அடங்கும்.  இதேபோல் இந்த வழக்குகளில் 69 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.




28 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடற்கரை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றை விற்பனை செய்யும் நபர்களின் கடைகளும் உணவு பாதுகாப்பு துறையினரின் இணைந்து கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டும் வருகிறது.  கடந்த ஆண்டை விட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான வழக்குகளில் 569 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 587 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  499 கிலோ புகையிலை பொருட்கள் 16 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.




24 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. 2 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக 442 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 495 பேர் கைது செய்யப்பட்டனர். 30385 கிலோ புகையிலைப் பொருட்கள் 23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 417 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. ரூபாய் 90 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


இனி வரும் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , மாவட்டத்தில் கஞ்சா புகையிலை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடந்தால் பொதுமக்கள் தயக்கம் இன்றி போலீஸாரிடம் தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று தேனி மாவட்ட காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.