தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் சுமார் 395 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2023 ஆம் ஆண்டு விட அதிகம். சாலை விபத்துக்கள் பல்வேறு காரணங்களால் நிகழ்கிறது. அதில் அதிவேகமாக செல்வது, மது போதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது போன்றவை முதன்மை காரணமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் சென்று விபத்துகளை சிக்கும் பலரும் தலைக்காயம் அடைந்து உயிரிழந்துள்ளனர். தலைக்கவசம் அணிந்து இருந்தால் உயிர் தப்பித்து இருக்கவே என்று வருந்த வைத்த விபத்துகளும் பல நடந்துள்ளன.
இதையும் படிங்க: Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
ஒரே ஆண்டில் 395 பேர்:
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் உயிரிழப்பு ஏற்படுத்திய விபத்துக்கள் 381 நடந்துள்ளன. உயிரிழப்பை ஏற்படுத்தாமல் காயங்களை ஏற்படுத்தி விபத்துக்கள் 846 நடந்துள்ளன. மொத்தம் 1627 விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் மொத்தம் 395 பேர் உயிரிழந்துள்ளனர். 1473 பேர் காயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 331 பேர் ஆண்கள், 47 பேர் பெண்கள், 13 சிறுவர்கள், 14 சிறுமிகள் அடங்குவர்.
அதே போல் காயம் அடைந்தவர்களில் 1052 பேர் ஆண்கள், 284 பேர் பெண்கள், 89 பேர் சிறுவர்கள், 48 பேர் சிறுமிகள். மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு விட 2024ஆம் ஆண்டில் விபத்துக்கள் உயிரிழப்புகள் அதிகம் 2023 ஆம் ஆண்டு மாவட்டத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 322 விபத்துக்கள் உயிரிழப்பு இன்றி காயங்களை மட்டும் ஏற்படுத்திய 846 விபத்துக்கள் என மொத்தம் 1368 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 330 பேர் உயிரிழந்துள்ளனர். 1442 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
வருங்காலங்களில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது. காவல்துறை நெடுஞ்சாலைத்துறை உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், விபத்துக்களை தடுப்பதில் அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அதே நேரத்தில் வாகன ஓட்டிகளும் அசுரவேகத்தை தவிர்த்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகன ஓட்ட வேண்டிய அவசியம்.
விழிப்புணர்வு வேண்டும்:
மிதவேகம்,மிக நன்று என்பது விழிப்புணர்வு வாசமாக மட்டும் இருந்துவிடாமல் வாகன ஓட்டிகள் பின்பற்றும் கட்டாய கடமையாக இருக்க வேண்டும். தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பது வெற்று வாசகம் அல்ல இரு சக்கர வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும். அரசு துறைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பும் இருந்தால் வரும் காலங்களில் விபத்துக்களை வெகுவாக குறைக்கலாம் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.