பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும்.


Uttarkhand: சிறையில் ராமாயண நாடகம் - குரங்கு வேடமிட்ட கைதிகள் - சுவர் ஏறி குதித்து தப்பி ஓட்டம்




இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.அப்படி தரிசனம் செய்வதற்காக நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து கோவிலுக்கு சென்று திரும்புகின்றனர்.




இந்த நிலையில் சபரிமலையில் மகர விளக்கு சீசனில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில்,  உடனடி தரிசன முன்பதிவு முறையை மீண்டும் கொண்டு வருவதற்காக அரசின் அனுமதியை பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடப்பு மண்டல மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி திறக்கப்படுகிறது. கடந்த வருடம் மண்டல மகர விளக்கு சீசனின் போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது. இதில் பாதுகாப்பு குளறுபடியும் இருந்ததாக அரசின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் உடனடி தரிசன முன்பதிவும் ஒரு பிரச்சினையாக கூறப்பட்டது.


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை மாவட்ட மக்களே.. மழை அறிவிப்பு என்ன ?


எனவே இந்த வருடம் உடனடி தரிசன முன்பதிவை ரத்து செய்து விட்டு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தினசரி 80 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கப்படும் என சமீபத்தில் நடந்த முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான உயர் மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அரசின் இந்த முடிவுக்கு பந்தளம் ராஜ குடும்பம் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் வழக்கம் போல் உடனடி முன்பதிவு தரிசனத்தை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.




இதற்கிடையே திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான அலுவலகத்தில் தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் உடனடி தரிசன முன்பதிவு முறையை மீண்டும் கொண்டு வருவதற்காக அரசின் அனுமதியை பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார். இது தேவஸ்தானத்தின் முடிவு என்ற போதிலும் சபரிமலை கோவில் விவகாரத்தில் தந்திரியின் அனுமதிக்கு பின்னரே அனைத்து முடிவுகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்