காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்றைய வானிலை நிலவரம் எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்வோம்.


இன்றைய வானிலை நிலவரம் 


தமிழகத்தில் அநேக இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி: மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


காஞ்சிபுரம் மாவட்ட நிலவரம் என்ன ? - Kanchipuram Weather Forecast 


காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மதியம் மற்றும் மாலை வேலை மிதமான மழை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று இரவு நேரங்களிலும் காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை வானிலை நிலவரம் - Chennai Weather Forecast 


சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதி பொருத்தவரை காலை வேலைகளில் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேலைகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


செங்கல்பட்டு மாவட்ட வானிலை நிலவரம் என்ன ? - chengalpattu Weather Forecast Today 


செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் காலை வேலைகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை வேலைகளில் செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் செய்யூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


திருவண்ணாமலை மாவட்ட நிலவரம் என்ன ? Thiruvanamalai Weather Forecast Today 


திருவண்ணாமலை மாவட்டத்தை பொருத்தவரை வந்தவாசி, செய்யார், ஆரணி ஆகிய பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் ஒரு சில இடங்களில் மாலை வேலைகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு நேரங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது


நாளைய வானிலை நிலவரம் 


தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருவள்ளூர், சென்னை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம். திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


நாளைய மறுநாள் வானிலை நிலவரம் 


தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஐடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இதே போன்று அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட, கூடுதலாக மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.