Kurinji Flower : கொடைக்கானலில் மலர்ந்தது அபூர்வ நீல குறிஞ்சி..! சுற்றுலா பயணிகள் உற்சாகம்..,
30-க்கும் மேற்பட்ட வகை குறிஞ்சி பூக்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளான நீலகிரி, கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே பூத்துக் குலுங்குகின்றன.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கொடைக்கானலில் உள்ள மலைப்பாங்கான இடங்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவருகின்றன. அதேபோல் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் விதவிதமான பூக்களும் அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுக்கின்றன. அந்த வகையில் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வகை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
இதையும் படிங்க : TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
Just In




கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் மலர் கண்காட்சி நடைபெறும். இந்த நிலையில் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏற்றவாறு அதிசய குறிஞ்சி பூக்கள் பூக்கின்றன. குறிஞ்சி பூக்களில் ஏறக்குறைய 255 வகைகள் உள்ளன. இவற்றில் 150 வகைகள் இந்தியாவில் தென்படுகின்றன. அதிலும் 30-க்கும் மேற்பட்ட வகை குறிஞ்சி பூக்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளான நீலகிரி, கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே பூத்துக் குலுங்குகின்றன.
இதையும் படிங்க : அடேங்கப்பா! தமிழ்நாட்டின் 5 முதலமைச்சர்கள் சேந்து நடிச்ச ஒரே படம் இதுதான்!
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி, கருங்குறிஞ்சி பூக்கள் பூக்கும். மேலும் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் சிறுக்குறிஞ்சி என 20க்கும் மேற்பட்ட குறிஞ்சி பூ இனங்கள் உள்ளன. இந்த குறிஞ்சியின் பெயரில் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலிலும் உள்ளது. இதில் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த குறிஞ்சி மலர்கள் கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 2500 மீட்டர் உயரத்தில் மட்டுமே வளரும் தன்மை உடையவை.
இதையும் படிங்க : Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
இந்நிலையில் ஆண்டுதோறும் பூக்கும் ஸ்ட்ரோ பிலாந்தஸ் கார்டி போலியோ வகை குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளது. டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பூக்கும் நீளம் மற்றும் வெள்ளை வண்ணங்களில் ஆன குறிஞ்சி மலர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ளது. இந்த அபூர்வ மலர் பூத்திருப்பதை கண்டு சுற்றுலாப் பணிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து வருகின்றன.
குறிஞ்சி மலர்களில் 255 க்கு மேற்பட்ட பூக்கள் உலகம் முழுவதும் உள்ளது. அதில் தற்போது வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் மலைப் பகுதி முழுவதும் பூத்துக் குலுங்குகின்றன. நீல நிறத்தில் இருப்பதால் நீலக்குறிஞ்சி மலர்கள் என கருதுகின்றனர் ஆனால் நீலக்குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். தற்போது பூத்துள்ள மலர்கள் அந்த வகையை சேர்ந்தது இல்லை என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பூக்கள் ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் விடுதியில் உள்ள தோட்டத்தில் அதிக அளவில் பூத்துக்குலுங்குகின்றன. இந்த பூக்களில் இருந்து தேனீக்கள் தேன் எடுப்பது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த அரிய வகை குறிஞ்சி பூக்களை தனியார் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.