மறைந்த முன்னாள் முதல்வர் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை உள்ள ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் செய்தியாளர் சந்திப்பில்..,” நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பண பலம், கூட்டணி பலம், அதிகார பலம் தான் தி.மு.க வென்றதற்கு காரணம். ஜெயலலிதா இல்லாமல் முதல் முறையாக அ.தி.மு.க தனித்து களம் கண்டது. அ.தி.மு.க.,வில் தலைமையே கிடையாது, இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்த நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Local Body Election 2022 : மதுரை : இஸ்லாமிய பெண்ணை ஹிஜாப் அகற்றச்சொல்லிய விவகாரம்: கைதானவருக்கு 4-ஆம் தேதிவரை நீதிமன்ற காவல்
அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து பேசி முடிவு எடுப்போம். அ.தி.மு.க வாக்கு வங்கி குறையவில்லை. வாக்களிக்க வேண்டிய மக்கள் வாக்களிக்க வரவில்லை. தி.மு.க ஆட்சி மீது உள்ள விரக்தியில் மக்கள் முழுமையாக வாக்களிக்கவில்லை. அ.தி.மு.க.,வினர் திமுகவில் இணைந்துவிடுவார்கள் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. தி.மு.க தான் அ.தி.மு.கவில் இணையும்.
பாஜக மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை சொல்வதற்கு காரணம் அது எப்போதும் வளரும் கட்சி தான், அவர்கள் அப்படி தான் சொல்வார்கள். தமிழகத்தில் என்றுமே தி.மு.க, அ.தி.மு.க தான் ஆட்சி செய்யும். மாற்று கட்சியினர் யாராலும் ஆள முடியாது.” என்றார்.
ஜெயலலிதா 74 வது பிறந்த நாளை அ.தி.மு.கவின் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருநகரில் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர் ராஜ்சத்யன் தலைமையில் நடைபெற்றது. இதில் 6 அடியில் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ மெழுகு சிலை வைக்கப்பட்டது அதற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு அதன் முன் ராஜ்சத்யன் தலைமையில் கீழ்க்கண்டவாறு சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Local Body Election 2022 | நகைப்புக்கு இடமானது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காட்டம் !