Railway; முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் திருநெல்வேலியில் இருந்து  கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் !

கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில்களில் உள்ள இரண்டு முன்பதிவு பெட்டிகளுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

இந்த ரயில்களில் 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 17 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 ரயில் மேலாளர் பெட்டியுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகள் இணைக்கப்படும்.

Continues below advertisement

சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு

பயணிகள் கூட்டம் நெரிசலை சமாளிக்க திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி - ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் இருந்து ஜூலை 18 மற்றும் 25 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 01.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 09.00 மணிக்கு ஷாலிமார் சென்று சேரும். மறு மார்க்கத்தில் ஷாலிமார் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06088) ஷாலிமாரிலிருந்து ஜூலை 20 மற்றும் 27 ஆகிய சனிக்கிழமைகளில் மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

- Rahul Gandhi: மணிப்பூர் போங்க; பிரச்சினைகளை கேளுங்க: பிரதமருக்காக வீடியோ வெளியிட்ட ராகுல்

இந்த ரயில்களில் 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 17 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 ரயில் மேலாளர் பெட்டியுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, சாமல் கோட், துவ்வாடா,சிமாச்சலம் வடக்கு, பென்டுர்டி, கோட்ட வலசா, விஜயநகரம், ஸ்ரீ கா குளம் ரோடு, பலாசா, பிரம்மாபூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், ஜஸ்பூர் கியான்ஸ்ஹர்,  பட்ரக், பாலேஸ்வர், கரக்பூர், சந்தர காச்சி ஆகிய ரயில் நிலையங்கள் நின்று செல்லும். இந்த ரயில்களில் உள்ள இரண்டு முன்பதிவு பெட்டிகளுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பிரஜ்னா 2024 திட்டத்தில் பள்ளிகளுக்கான போட்டி; பழனியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சாதனை

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Raayan Trailer Review: தனுஷின் ராயன் படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்... டிரைலர் சொல்வது என்ன?

Continues below advertisement
Sponsored Links by Taboola