ராணுவ பள்ளியில் பிரஜ்னா 2024 என்ற திட்டத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கான போட்டியில் பழனியை சேர்ந்த பாரத் பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை பெற்று சாதனை படைத்தனர். 




திண்டுக்கல் மாவட்டம் பழனி, உடுமலை அருகே செயல்பட்டு வருகிறது சைனிக் என்ற ராணுவ பள்ளி.  இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இயங்கி வரும் பல பள்ளிகளுக்கு இடையில் கல்வித்துறை சார்ந்த பல்வேறு போட்டிகளை 14 மற்றும் 15 ஜூலை 2024 ஆம் தேதிகளில் பிரஜ்னா 2024 என்ற புது திட்டத்தை அறிமுகப்படுத்தி பல்வேறு போட்டிகளை நடத்தியது. சைனிக் பள்ளியில் படித்து முடித்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள்  அனைவரும் ஒருங்கிணைத்து இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இத்திட்டத்தின் நோக்கம் இன்றைய தலைமுறையின் மாணவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் முன்னாள் மாணவர்கள் இணைந்து இந்த போட்டியை நடத்தினார்கள்.


Raayan Trailer: சிங்கமா? ஓநாயா? பேய் மாதிரி வந்த தனுஷ்! வெளியானது ராயன் பட ட்ரைலர்!




இப்போட்டிகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 150 க்கு மேற்பட்ட  பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தின் அறிமுக ஆண்டிலேயே பாரத் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளையும், பதக்கங்களையும் ரொக்கப் பரிசுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இதில் பழனி பாரத் பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவியப் போட்டியில் சால்வியா முதல் இடத்தையும் முதலிடத்திற்கான சான்றிதழும் பதக்கமும் மற்றும் ஐந்தாயிரம் ரொக்க பரிசும்,


JK Terrorist: பயங்கரவாத தாக்குதலில் 5 பாதுகாப்பு வீரர்கள் பலி: ஹெலிகாப்டர் மூலம் களமிறங்கும் ராணுவம்! நடந்தது என்ன?


வினாடி வினா போட்டியில் முதல் இடத்தையும்  முதல் இடத்திற்கான சான்றிதழ்களும் , பதக்கங்களுடன் மற்றும் ரொக்க பரிசாக பத்தாயிரம் ரூபாயை பன்னிரண்டாம் வகுப்பைச் சார்ந்த மிருதுல வர்ஷினி என்ற மாணவியும், இளமாறன் என்ற மாணவனும் இணைந்து வென்றுள்ளார்கள். ஆங்கில கட்டுரை எழுதும் போட்டியில் பத்தாம் வகுப்பைச் சார்ந்த கவிஸ்ரீ என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், இரண்டாம் இடத்திற்கான பதக்கமும், சான்றிதழும் மற்றும் மூன்று ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும் பெற்றுள்ளார்.




Naam Tamilar Katchi : ”தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சியாக வளர்ந்துள்ள நாம் தமிழர்” புதிய வரலாறு படைக்கும் சீமான்..!


ஆங்கில பேச்சுப் போட்டியில் 11ஆம் வகுப்பு மாணவி சிவகுரு பிரியா மூன்றாம் இடத்தை பிடித்து மூன்றாம் இடத்திற்கான பதக்கத்தையும், சான்றிதழையும் மற்றும் 2000 ரூபாய் ரொக்க பரிசையும் பெற்றுள்ளார். பட்டிமன்ற போட்டியில் பதினொன்றாம் வகுப்பு மாணவி சிவகுரு பிரியா மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவி மிருதுளவர்சினி கலந்து கொண்டு நான்காம் பரிசையும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் பங்கு கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பரிசு பெற்ற  மாணவர்களை இன்று பாரத் பப்ளிக் பள்ளி நிர்வாகிகள், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.