பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்களின் பிரச்சனைகளை கேட்டறிய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அதோடு,  மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வலியுறுத்துவதை I.N.D.I.A. கூட்டணி உறுதி செய்யும் என்று ராகுல் காந்தி எக்ஸ் தள பதிவில் குறிப்பிடுள்ளார்.


காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணிப்பூர் சென்று அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்கள், முகாம்களில் உள்ளவர்களை சந்தித்து பேசிய வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடுள்ளார். 






மணிப்பூர் கலவரம் பின்னணி:


கடந்த 2023ம் ஆண்டு மணிப்பூரில் இரண்டு சமூகத்திற்கு இடையே கடும் கலவரம் ஏற்பட்டது. பா.ஜ.க. ஆட்சி செய்துவரும் மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் நடந்த கலவரம் இன்னும் அணையாமல் தொடர்ந்து வருகிறது. ஏராளமான உயிர்கள் பறிப்போன பிறகும் பா.ஜ.க. அரசு எந்தவித நடவடிக்கையில் எடுக்கவில்லை. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் கலவரம் பற்றி வாய் திறக்காததும் இந்தச் சம்பவத்திற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பா.ஜ.க. அரசுக்கு எதிராகப் பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


மணிப்பூரில் பெரும்பான்மை வகிக்கும் ‘மெய்தி’ சமூகத்தினரைப் பழங்குடிப் பட்டியலில் சேர்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுபான்மை ‘குக்கி’ பழங்குடியினர் அமைதிப் பேராணி நடத்தினர். குக்கி மக்களின் பேரணியின் மூது மெய்தி சமூகத்தினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இரு சமூகத்துக்கும் இடையேயா மோதல் வெடித்தது. குக்கி பழங்குடிகளின் கிறிஸ்தவ தேவாலயங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மெய்தி சமூகத்தினரால் மூன்று குக்கி பெண்கள் நிர்வாணமாக சாலைகளில் இழுத்துவரப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிப்பூரில் வன்முறை பரவியிருந்தது. இதற்கு நாடு  முழ்வதும் எதிர்ப்பு எழுந்தது. பலரும் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். இது நடந்து ஓராண்டு ஆகியும் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்கு செல்லாதது விமர்சிக்கப்பட்டு வருகிறது. தொடரும் மணிப்பூர்  கலவரத்தால் இதுவரை 221 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், நாட்டின் பிரதமரும் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இம்மாநில முதலமைச்சர் பெரும்பான்மை மெய்தி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


தொடரும் வன்முறைக்கு மத்திய, மாநில அரசுகள் ஏதும் செய்யமால் இருக்கும் அதிருப்தியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள இரண்டு தொகுதியில் பா.ஜ.க.-வைத் தோற்கடித்து மக்கள் பதில் அளித்துள்ளனர். 


நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மணிப்பூர் கலவரம் குறித்து குரலெழுப்பப்படும்:


ராகுல் காந்தி மூன்றாவது முறையாக மணிப்பூருக்கு சென்றிருக்கிறார். தனது பயணம் குறித்து 5 நிமிட வீடியோவில் அங்குள்ள மக்களிடம் உரையாடியது, அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தவைகள் இடம்பெற்றுள்ளது.


இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள எம்.பி. ராகுல் காந்தி ,” மூன்றாவது முறையாக மணிப்பூர் வருகிறேன். இங்கு நிலமை இன்னும் மாறவில்லை. வீடுகள் எரிந்துகொண்டிருக்கின்றன; சாதாரண மக்களின் வாழ்வு ஆபத்தில் உள்ளது; ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் வசிக்க வற்புறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் இங்கு வந்து மக்களின் பிரச்சனைகளை கேட்டறிய வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.


ஜிரிபாம் பகுதியில் உள்ள முகாமில் உள்ள ஒருவர் தெரிவிக்கையில்,” என்னுடைய பாட்டி பாதிப்பு இருக்கும் பகுதியில் சிக்கிக்கொண்டிருக்கிறார். எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.” என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.


அசாம் மாநிலத்தில் உள்ள தலாய் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கியிருக்கும் ஒவரது தனது சகோதரரை போதிய மருந்து வசதிகள் இல்லாததால் இறந்துவிட்டதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி முகாம்களில் மருந்து வசதிக்கு உதவி செய்யும் என்று அவர்களுக்கு ராகுல் காந்தி உறுதியளித்தார். 


இந்த விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இங்கே இப்போது தேவை அமைதி மட்டுமே. வன்முறை அனைவரையும் பாதித்துள்ளது என்று ராகுல் காந்தி மக்களின் தெரிவித்துள்ளார்.  மணிப்பூர் மக்களின் பிரச்சனை குறித்து குரல் கொடுக்க முடியும் என்றும் ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசால் மட்டும் என்பதையும் அவர் குறிபிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்கு சென்று பார்வையிடவும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பவும் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.