தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்சி மலை பகுதியில் போடி தாலுக்காவிற்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துககடும் கருங்கல்காடு, குரவன் குழி என 10க்கும் மேற்பட்ட மலை கிராங்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு மின்சாரம் பெரியகுளத்தில் இருந்து மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மூலமாக செல்கின்றது. இந்நிலையில் ஊரடி, ஊத்துக்காடு பகுதியில் கடந்த சில மாதங்களாக அங்கு உள்ள மின் மாற்றியில் தொடர்ந்து பழுது ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 6 மாதமாக மின்சாரம் இல்லாமல் மலை கிராம மக்கள் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் கடந்த ஒரு மாதமாக மின்சாரம் இல்லாத நிலையில் மலை கிராம மக்கள் பெரிதும் அவதிப்படுவதாக வேதனை தெரிவிப்பதோடு இது குறித்து பெரியகுளம் மின் வாரிய அதிகாரியிடம் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுகாத சூழ்நிலையே உள்ளதாகவும் பழுதை நீக்க தற்காளிக பணியாளர் நியமித்துள்ளதால் மலைகிராமங்களில் வந்து மின் மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கம் செய்ய வருவதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.
Karthigai Deepam: திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
எனவே மலை கிராமங்களில் மின்சார தடை ஏற்பட்டால் பழுதை நீக்க நிரந்தர பணியாளர்களை நியமித்து தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பெரியகுளம் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட பொழுது விரைவில் மலை கிராமங்களில் ஏற்பட்டுள்ள மின்தடையை போக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்