திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலபட்டி தபால் நிலையத்தில்  சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தினை போஸ்ட் மாஸ்டர் ஒருவரே முறைகேடு செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜி.தும்மலபட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்தில் தும்மலபட்டி, மேட்டூர், ஊத்தங்கல் புதுப்பட்டி, குளத்துப்பட்டி உட்பட சுற்றி உள்ள பகுதி கிராம மக்கள் சேமிப்பு தொகை மற்றும் வைப்புத் தொகை ஆகிய கணக்குகளை வைத்து வரவு செலவு செய்து வருகின்றனர்.


91 Years of Mettur Dam: 91-வது ஆண்டில் கம்பீரமாக அடி எடுத்து வைக்கும் மேட்டூர் அணை; இதன் வரலாறு தெரியுமா?




முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் எளிதாக சென்று பண பரிவர்த்தனை செய்யும் வகையில் தபால் நிலையத்தை பயன்படுத்தி வந்துள்ளனர் . தற்போது இந்த தபால் நிலையத்தின் போஸ்ட் மாஸ்டராக முனியாண்டி என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தபால் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவரிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கணக்குகளை துவக்கி வரவு செலவு வைத்துள்ளனர் .




இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு செலுத்திய வைப்புத் தொகையை சிலர் திரும்ப பெற சென்ற போது அவர்கள் கட்டிய பணத்திற்கும் தபால் நிலைய அலுவலகத்தில் இருந்த கணக்கில் உள்ள பணத்திற்கும் வித்தியாசம் வந்துள்ளது. தங்களிடம் பெறப்பட்ட பணம் தபால் நிலைய கணக்கில் குறைவாக வரவு செய்யப்பட்டு இருப்பதை கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


WT20 WC: வங்கதேசத்தில் அசாதாரண சூழல்! மகளிர் டி20 உலகக்கோப்பை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடித்தது ஜாக்பாட்!




இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் உபகோட்ட தபால் நிலைய தனிக்கை அதிகாரிகள் ஜி.தும்மலப்பட்டி தபால் நிலையத்தில் சோதனையிட்டனர் . அப்போது பலரது கணக்குகளில் பணம் முறைகேடு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது . இந்த தகவல் காட்டுத் தீயாக பரவவே தபால் நிலையத்தில் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் அனைவரும் தபால் நிலையத்தின் முன்பு குவிந்தனர் . அப்போது பலரது பாஸ் புத்தகங்கள் போலியாக போடப்பட்டிருப்பதும் போலியாக ரசீதுகள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.


Rishabh Pant : நெருப்புடா நெருங்குடா பாப்போம்... ரஜினியின் 'கபாலி' கெட்டப்பை ரீ கிரியேட் செய்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்




மேலும் பிரதமர் மோடியின் தங்க மகள் திட்டத்தில் சேமிப்பு கணக்கு செய்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் முறைகேட்டில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . இதே போல் அக்கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோரிடம் பல ஆண்டுகளாக அவர்கள் கொடுக்கும் பணத்தை கணக்கில் வரவு செய்யாமல் ரூபாய் 10 ஆயிரம் முதல் ரூபாய் மூன்று லட்சம் வரை என கோடிக்கணக்கில் மோசடி நடந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே மத்திய அரசு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏழை எளிய விவசாய பொது மக்களின் பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த கிராமத்து மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.