மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (18.10.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின் நிறுத்தம் செய்யப்பட்டும் இடங்கள்
உசிலம்பட்டி, மறவர் பட்டி, சத்திர வெள்ளா ளப்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்துார், டி.மேட்டுப் பட்டி, கரடிக்கல், சின்ன பாலமேடு, சுக்காம் பட்டி, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்க லம், உசிலம்பட்டி, முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனுார், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப் பட்டி, பாலமேடு.
அலங்காநல்லுார், தேசிய சர்க்கரை ஆலை, டி.மேட்டுப்பட்டி, பண்ணைக்குடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னக்கவுண்டம்பட்டி, சிறுவாலை, அம்பலத்தாடி, பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிப் பட்டி, கீழச்சின்னணம்பட்டி.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Tirupati Rain: மழை! மழை! திரும்பும் திசை எல்லாம் திருப்பதியில் மழை - ரெட் அலர்ட் எச்சரிக்கை