”இடையே உள்ள யாருக்கும் எந்த பணமும் கொடுக்க தேவையில்லை என்றும் தகுதி உடைய பயனாளிகள் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் ஆணையாளர்களை நேரில் சந்தித்து பணி ஆணை எனும் ஒர்க் ஆர்டர்யை பெற்றுக் கொள்ளலாம்”.

 

கலைஞரின் வீடு கட்டும் திட்டத்தின் / Kalaignarin Kanavu Illam Scheme 2024

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் செல்லம்பட்டி, சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமப்புற பகுதிகளில் கலைஞரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பயனாளிகளுக்கு ஒர்க் ஆர்டர் வாங்குவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர்கள் மூலம் வசூல் வேட்டை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஒரு வீட்டிற்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வசூல் செய்து வருவதாகவும், ஊராட்சி மன்ற தலைவர், ஓவரைசர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்க வழங்க வேண்டும் என இந்த வசூல் வேட்டை நடப்பதாக கூறப்படுகிறது.

 


 

ஒரு சிலர் வசூல் வேட்டை நடத்தி சம்பாதிக்கும் முயற்சி

 

வீடுகட்டும் கனவை நினைவாக்க போராடும் பொதுமக்களுக்கு அரசின் கலைஞர் வீடு வழங்கும் திட்டதின் மூலம் 3 லட்ச ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் சூழலில், இதிலும் ஒரு சிலர் வசூல் வேட்டை நடத்தி சம்பாதிக்கும் முயற்சியில் இறங்கி, பணம் கொடுக்கவில்லை என்றால் ஒர்க் ஆர்டர் கிடைக்காது, பில் கிடைக்காது என கூறி மிரட்டி பணம் பறிப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

யாருக்கும் எந்த பணமும் கொடுக்க தேவையில்லை

 

இது குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களிடம் கேட்ட போது கலைஞர் வீடு வழங்கும் திட்ட பயனாளிகளை அரசு ஆன்லைன் மூலம் தேர்வு செய்து அதற்கான பணி ஆணை எனும் ஒர்க் ஆர்டர்களை வழங்கி வருவதோடு, பில்களையும் தேக்கமின்றி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இடையே உள்ள யாருக்கும் எந்த பணமும் கொடுக்க தேவையில்லை என்றும் தகுதி உடைய பயனாளிகள் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் ஆணையாளர்களை நேரில் சந்தித்து பணி ஆணை எனும் ஒர்க் ஆர்டர்யை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இடைத்தரகர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தெரிவித்தனர்.