மதுரையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்த ஓட்டுநர் பாலமுருகன் வழக்கில் சிறப்பாக பணியாற்றிய திருமங்கலம் மகளிர் காவல் நிலைய காவல் துறையினருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் பாராட்டுகளை தெரிவித்தார்.
லாரி ஓட்டுநர் பாலமுருகன் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை லாரி ஓட்டுனரான பாலமுருகன் (35) என்பவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் மதுரையை சேர்ந்த 8 -வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது லாரி ஓட்டுநர் பாலமுருகன் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் மதுரை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் பாலமுருகன் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கானது மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் நீதிபதி முத்துகுமரவேல் முன்பாக இறுதி விசாரணை முடிவடைந்து வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.
27ஆயிரம்ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முத்துகுமரவேல் அதிரடி தீர்ப்பு
இந்த வழக்கு விசாரணையில் ஓட்டுனர் பாலமுருகன் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதையடுத்து பாலமுருகனுக்கு போக்சோ வழக்குப்பிரிவில் 24 ஆண்டுகள் சிறைதண்டனை 25 அபராதமும், வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவில் 1 ஆண்டு சிறை தண்டனை , 2 ஆயிரம் அபராதம் என மொத்தமாக 25ஆண்டுகள் சிறை தண்டனையும், 27ஆயிரம்ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி முத்துகுமரவேல் அதிரடி தீர்ப்பு அளித்தார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் பாராட்டுகளை தெரிவித்தார்.
இதனையடுத்து 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் சிறைதண்டனை பெற்ற ஓட்டுநர் பாலமுருகன் காவல்துறை பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மதுரையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்த ஓட்டுனர் பாலமுருகன் வழக்கில் சிறப்பாக பணியாற்றிய திருமங்கலம் மகளிர் காவல் நிலைய காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் பாராட்டுகளை தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lebanon: லெபனான் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் - 22 பேர் பலி, 117 பேர் காயம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TVK Vijay: "முயற்சி வெற்றி பெறட்டும்" தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய நடிகர் விஜய்!