Palani : "திமுக ஆட்சி காலம் தான் இந்து அறநிலைத்துறையின் பொற்காலம்" - உதயநிதி

திமுக எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் ஆன்மீகப் பெரியோர்கள், பக்தர்கள் பாராட்டி வருகிறார்கள். அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் உறுதி - உதய நிதி வாழ்த்துரை

Continues below advertisement

அனைவருடைய உணர்வுக்கும் மதிப்பு அளிக்கக்கூடியது தான் திமுக அரசு, அறநிலைத்துறையின் பொற்காலம் திமுக ஆட்சி காலம் தான் காணொளி வாயிலாக பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் சிறப்புரையாற்றிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

Continues below advertisement


பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் 2வது நாளான இன்று  25.08.24 விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக சிறப்பு உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில், அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலில் தான் குடியிருப்பார் என்று முதல்வர் கூறுவது உண்மை கோவிலில் தான் அமைச்சர் சேகர்பாபு குடியிருப்பார் என்று முதல்வர் சொல்வதைப் போல் அவரது அறநிலையத்துறை பணிகள் சிறப்பாக உள்ளது.

"பிராமணர் என்ற வார்த்தை.. சிலரை உறுத்துது" பிரபல சிஇஓ-வின் சர்ச்சை பதிவு.. கொந்தளித்த நெட்டிசன்கள்!


திடீரென்று இந்த மாநாடு நடப்பதாக சிலர் கூறுகிறார்கள் ஆனால் அது உண்மை இல்லை கடந்த மூன்று ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு அறநிலையத்துறையில்  பல சாதனைகளை செய்து தான் இந்த மாநாட்டை நடத்துகிறது . திமுகவை பொருத்த வரையில் யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிக்காது. அனைவரது உணர்விற்கும் மதிப்பு அளிக்கக் கூடிய அரசாக திமுக திகழ்கிறது. அறநிலை துறையின் பொற்காலம் என்றால் அது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலம் தான் கலைஞர் வழியில் நம்முடைய முதல்வர் அறநிலையத்துறையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 

Kanguva Postponed : சொன்ன வார்த்தையை காப்பாற்றிய ஞானவேல்ராஜா...கங்குவா ரிலீஸ் ஒத்திவைப்பு?


மூன்றாண்டுகளில் 1400 க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது 5,600 கோடி மதிப்பிலான 6,000 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது . 3,800 கோடி மதிப்பில் 8,000 கோயில்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது . நாள்தோறும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பழனி கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியில் கல்வி பயிலும் 4,000 மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

Breaking News LIVE: எனது காதுகள் எப்போதும் Negativity-க்கு மூடியிருக்கும் - யுவன்ஷங்கர் ராஜா


அதேபோன்று மதிய நேர உணவும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் இதுபோன்று அடுக்கடுக்கான பல சாதனைகளை செய்து தான் இந்த மாநாட்டை தமிழக அரசு நடத்தி வருகிறது. இது மாநாடாக மட்டுமல்லாது தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெற்று வருகிறது. திமுக எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் ஆன்மீகப் பெரியோர்கள், பக்தர்கள் பாராட்டி வருகிறார்கள். அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் உறுதி. என வாழ்த்துறை வழங்கினார்.

Continues below advertisement