Breaking News LIVE: எனது காதுகள் எப்போதும் Negativity-க்கு மூடியிருக்கும் - யுவன்ஷங்கர் ராஜா
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
"எனது காதுகள் எப்போதும் Negativity-க்கு மூடியிருக்கும். இசை மற்றும் Positivity-க்கு திறந்திருக்கும்" : சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளி மாணவர்களுக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அட்வைஸ்
கோவை: கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் அதிரடி சோதனை - கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்.
50 மாணவர்களைப் பிடித்து தீவிர விசாரணை
அண்ணாமலையின் பேச்சு சிறுபிள்ளைத் தனமாக உள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வு.
தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ₹1000ல் இருந்து ₹1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ₹150ல் இருந்து ₹225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டங்களுக்கு ₹450ல் இருந்து ₹670 ஆக உயர்கிறது புதிய கட்டணம் எதிர்வரும் நவம்பர் - டிசம்பர் செமஸ்டர் தேர்வில் நடைமுறைக்கு வரும் என தெரிவிப்பு
பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுக்கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் உயர்த்தியுள்ளது. செய்முறைத் தேர்வுக்கட்டணமும் உயர்ந்துள்ளது.
சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மறைந்த விஜயகாந்தின் சிலை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
“அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொண்டனர்” -இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேட்டி!
வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இஸ்ரேலில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ராணுவ அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
விண்வெளிக்குச் சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ் வரும் 2025ம் ஆண்டு பூமிக்குத் திரும்புகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Background
- மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் – மத்தி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
- மேகதாது அணை திட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் கொண்டு வருகிறது – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
- கோயிலின் வளர்ச்சிக்கு திராவிட மாடல் எப்போதும் துணை நிற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கோயில் கருவறைக்குள் சமத்துவம் வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று நிறைவு – ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
- தி.மு.க. அரசு வாக்குக்காக முருகன் மாநாடு நடத்துவதாக தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றச்சாட்டு
- தேனி, பெரியகுளம் அருகே மலைக்கிராமத்திற்கு சாலை இல்லாததால் ரேஷன் அரிசியை கொண்டு செல்ல இயலாத அவலம்
- மயிலாடுதுறை குத்தாலம் அருகே வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழப்பு – தலா 3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மனிதனின் அக்கறை மற்றும் பேராசைக்கு எதிர்வினையே வயநாடு பேரிடர் – கேரள நீதிமன்றம்
- மகாராஷ்ட்ராவில் இன்று மகளிர் குழுக்களுக்காக நிதி வழங்கும் பிரதமர் மோடி
- டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில் கைது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -