கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது . ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்தில் பாபி தியோல் , திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ் , தெலுங்கு , இந்தி ,மலையாளம் கன்னடன் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 350 கோடி பட்ஜெட் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள கங்குவா படம் இந்த ஆண்டில் வெளியாகும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம்.
கங்குவா படம் வெளியாக இருந்த அதே நாளில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படமும் வெளியாக இருந்தது. இந்த தீபாவளி ரஜினி மற்றும் சூர்யா படங்கள் மோதிகொள்ள இருப்பது குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்ததது .மேலும் ரஜினி மற்றும் சூர்யா ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் கடுமையான கருத்து மோதல் நிலவி வந்தது.
கங்குவா ரிலீஸ் ஒத்திவைப்பு
கங்குவா படத்தில் ரிலீஸ் வரும் அக்டோபர் 10 ஆம் தேதியில் இருந்து ஒத்திவைக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து படக்குழு சார்பில் அதிகார்ப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியுடன் மோத மாட்டோம்
கங்குவா படம் ரஜினியின் வேட்டையன் படத்துடன் வெளியாவது குறித்து அப்படத்தின் தயாரிப்ப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். அதில் ”நான் என்னுடைய பிறந்தநாளுக்கு கூட கோயிலுக்கு போனது கிடையாது. ஆனால் ரஜினி சார் பிறந்தநாளுக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு போய் 108 சுற்று சுத்தி வருபவன் நான். என்னுடைய பெற்றோர் பிறந்தநாளுக்கு கூட கோயிலுக்கு போயிட்டு வந்துருவோம். ஆனா 108 சுற்று சுற்றுவது எல்லாம் ரஜினி சாருக்காக மட்டும் தான். ரஜினி சாரோட அப்படி ஒரு எமோஷனல் கனெக்ட் இருக்கிறது.
ரஜினி சார் படத்தோட என்னோட படம் கிளாஷ் என சொன்னால் தானே 1000 யூடியூப் சேனல்களுக்கு கன்டென்ட் கிடைக்கும். 100% அதனால் மட்டும் தான் அப்படி வதந்தி பரப்புறாங்க. ரஜினி சார் கூட கிளாஷ் பண்றதுக்கான ஐடியாவும் இல்ல, வரவும் மாட்டோம். அன்னைக்கு தேதி ஃப்ரீயா இருந்துது. அது மட்டும் இல்ல ஒரு பான் இந்தியன் படத்துக்கு அந்த தேதி ஒரு சிறப்பான தேதி. அது தான் உண்மையான காரணம்" என்றார்