அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். முருகப்பெருமானின் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. பழனி மலைக்கோவிலில் உச்சி காலபூஜை முடிந்தவுடன் மூலவருக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து விநாயகர்,சண்முகர், வள்ளி, தெய்வயானை, துவாரபாலகர்கள், வீரபாகு, நவவீரர்கள் ஆகியோருக்கு காப்பு கட்டப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.


Chennai Air pollution: தீபாவளி கொண்டாட்டம் : படுமோசமான நிலையில் சென்னை.. உச்சத்துக்கு சென்ற காற்று மாசுபாடு..!




தொடர்ந்து பக்தர்களும் காப்பு கட்டி கொண்டு சஷ்டி விரதத்தை தொடங்கினர்.  நேற்று மாலை சூரிய கிரகணம் நடைபெற்றதால் உச்சிகால பூஜை சற்று முன்னதாகவே நடத்தப்பட்டு, காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. மாலை சூரிய கிரகணம் முடிந்தவுடன் கோவிலில் சம்ரோஷ்ணம் நடத்தப்பட்டு, சாயரட்சை பூஜைகள் நிறைவுபெற்று 7மணிக்கு மேல் பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


Madras Highcourt : "சமூக ஊடகங்களில் பரவும் அவதூறுகளால் தேசத்திற்கே அவமானம்" - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை




Air Pollution : சென்னையில் நடமாட முடியாத அளவிற்கு காற்று மாசுபாடு - பூவுலகின் நண்பர்கள் வேதனை..!


பழனி முருகன் கோவிலில் தொடங்கிய கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ஆறாம் நாள் திருவிழாவான வருகிற 30ம்தேதியும், 31ம் தேதி சண்முகர் வள்ளி-தெய்வயானை சமேதருக்கு திருக்கல்யாணம் வைபவமும் நடைபெற்று அன்றுடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது. கந்த சஷ்டியை முன்னிட்டு பழனியில் ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். கந்தசஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாரும் செய்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண