Chennai Air pollution: தீபாவளி கொண்டாட்டம் : படுமோசமான நிலையில் சென்னை.. உச்சத்துக்கு சென்ற காற்று மாசுபாடு..!

சென்னையில் மிகவும் மோசாமான அளவுக்கு காற்று மாசு சென்றுள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது

Continues below advertisement

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையில் , மிக மோசமான அளவில் காற்று மாசடைந்ததாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் காற்று மாசின் அளவானது 345 லிருந்து 786 வரை சென்றதாகவும் மாசு கட்டுப்பாடு வாரியம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

தீபாவளி காரணமாக பட்டாசு வெடித்ததில், புகை மண்டலமாக சென்னை சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

அதிகபட்சமாக சௌகார்பேட்டையில் 786 என்ற அளவில் காற்றின் மாசு இருந்ததாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக திருவொற்றியூரில் 79.7 டெசிபல் ஒலி மாசு பதிவாகியுள்ளது.

அதிகளவு பட்டாசு வெடித்தது, காற்றில் அதிக ஈரத்தன்மை, காற்றின் குறைந்த வேகம் ஆகியவை காற்று மாசு அதிகரித்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகை:

சென்னையில் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புதிய ஆடைகள் அணிந்து, இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை பல்வேறு கட்டுபாடுகள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு எந்த கட்டுபாடுகளும் இல்லாமல், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வெடிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. 

இந்த நிலையில், சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட்ட ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் சென்னையில் காற்று மாசு அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது.

மலைப்போல் குவிந்த பட்டாசு கழிவுகள் : 

தீபாவளியை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் மட்டும் பட்டாசு வெடித்ததில் மூலம் 500 டன் குப்பைகளை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குவிந்தது. இதையடுத்து நேற்று இரவு சென்னையில் சுமார் 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் மூலம் இரவோடு இரவாக குப்பைகளை அகற்றியுள்ளனர். 

தலைநகர் சென்னையில் வழக்கமாக 5, 300 மெட்ரிக் டன் குப்பைகள் மட்டுமே சேகரிக்கப்படும். நேற்று மட்டும் கூடுதலாக 500 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. 

Also Read: Chennai Drainage : "மழைநீர் வடிகால் பணிகள் இன்னும் 3 நாட்களில் முடிவடையும்" - அமைச்சர் எ.வ.வேலு

Continues below advertisement