பக்தர்கள் வருகை அதிகரிப்பு


பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்ததும் பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை தினம் என்பதால்  நேற்று மாலை முதல் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சேலம் மாவட்டம் அரிசிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் 41 ஆண்டுகளாக பழனி பங்குனி உத்திர திருவிழாவிற்கு வருகின்றனர். பழனிக்கு வந்த பக்தர்கள்  உடல் முழுவதும் அழகு குத்தி கிரேன் வாகனத்தில் அந்தரத்தில் தொங்கியபடி கிரிவலம் பாதையில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


TVK Vijay: ஈஸ்டர் தினத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் தழைக்கட்டும் - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து




 நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்


ஆண்கள் பெண்கள் அந்தரத்தில் தொங்கி கிரிவலம் வந்தது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அதேபோல் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் பக்தர்கள் பழனி அடிவாரம் கிரிவலப்பாதையில் தீர்த்தகாவடிகள் எடுத்து ஆடிப்பாடியும் ,மின் இழுவை ரயில் நிலையம் ,ரோப் கார் நிலையம், மலைக்கோவில் உள்ளிட்ட இடங்களில் சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவிலில் நிர்வாகம் செய்து வருகிறது.பக்தர்களின் பாதுகாப்பு வசிதிக்காக 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.


CM Stalin: "எல்லா ரவுடிகளையும் கட்சியில் வைத்துக்கொண்டு சட்ட ஒழுங்கை பேசலாமா?" - முதல்வர் ஸ்டாலின்




மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை:


பழனி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதைக்கு வாகனங்கள் வரும் பாதையை கோயில் நிர்வாகம் தடுப்புகள் வைத்து அடைத்துள்ளன. இன்று அரவக்குறிச்சியில் இருந்து பழனிக்கு வந்த மாற்றுத்திறனாளி பக்தர் கிரிவலப் பாதைக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தார். தடுப்புகளைத் தாண்டி மாற்றுத்திறனாளி பக்தரை உறவினர்கள் தூக்கிச் சென்று சக்கர நாற்காலியில் அமர வைத்தனர்.


Rakshita: பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் 'மதுர' பட நாயகி.. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?




தொடர்ந்து இதுபோன்று மாற்றுத்திறனாளிகள் கிரிவலப் பாதைக்கு செல்ல சிரமப்பட்டு வரக்கூடிய நிலை இருந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வரக்கூடிய வாகனங்களை கிரிவலப் பாதையில் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கிரிவலப்பாதையில் முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், கோயில் அதிகாரிகள் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதுபோல மாற்றுத்திறனாளிகள் வரக்கூடிய வாகனங்களை ரோப் கார் நிலையம் மற்றும் வின்ச் நிலையம் வரையில் சென்று வர அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.