உயிரிழந்தது குறித்து  தகவலை தனியார் காற்றாலை நிறுவனம் முன்னுக்கு பின்  முரணாக தகவல் கூறுவதால்  மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத அறை  முன்பு  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.




காற்றாலை பொறுத்தும் பணியில் ஊழியர்:


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயது சரவணக்குமார். இவருக்கு சத்யா என்ற மனைவியும் 8 மாத கைக்குழந்தையும் உள்ளது. சரவணகுமார் ரினோம்  என்ற காற்றாலை நிறுவனத்தில் காற்றாலை அமைக்கும் பணியும், காற்றாலையில் பழுது நீக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.  இன்று காலை வழக்கம் போல் தனது குழுவினருடன்  பணிக்கு சென்ற சரவணகுமார் கண்டமனூர் அருகே உள்ள பகுதியில் காற்றாலையில்  பழுதுநீக்கும்  பணியிலும்  ஈடுபட்டார்.


RCB vs KKR LIVE Score: விக்கெட் விழுந்தாலும் மிரட்டும் கிங் கோலி; ஆக்ரோசமாக பந்து வீச கொல்கத்தா தீவிரம்!




காற்றாலை பணியின்போது விபத்து:


அப்போது பழுது நீக்கும் பொருட்களை மேற்பகுதிக்கு சங்கிலியை கொண்டு செல்லும்போது அவரும் சங்கிலியால் மேலே இழுத்துச் செல்லப்பட்டார். பதினைந்து  அடிக்கும் மேல் சென்ற அவர் திடீரென அங்கிருந்து கீழே தலை குப்புற விழுந்தார். இதில் தலைமுகம் மார்பு பகுதியில் படுகாயம் அடைந்த சரவணகுமார் உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரவணகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.


Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?




பிரேதத்தை உறவினர்கள் வாங்க மறுப்பு:


இதையடுத்து சரவணகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த சரவணகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு கூடினர். விபத்து குறித்து காற்றாலை நிறுவனம் முதலில்  மேற்புறத்தில் இருந்து கீழே விழுந்ததாகவும், பின்பு 15 அடி உயரத்திலிருந்து சங்கிலியால் இழுத்துச் செல்லப்பட்டு விழுந்ததாகவும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதை அடுத்து அவரது உறவினர்கள் கோபம் அடைந்தனர். இதையடுத்து தனியார் காற்றாலை நிறுவனம் முன்னுக்கு பின் முரணாக கூறுவதால் சரவணகுமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பிரேத  பரிசோதனைக்கு  ஒத்துழைக்க மறுத்து பிரேத அறை முன்பு உறவினர்கள் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் தேனி அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.