தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் ஈஸ்டர் மக்களுக்கு  திருநாள் வாழ்த்து பகிர்ந்துள்ளார்.


கோட்


 நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. கோட் படத்தின் அடுத்த அப்டேட் எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் தெரிவித்துள்ள தகவலின் படி கோட் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அஜித் நடித்த மங்காத்தா படத்தில் இடம்பெற்றது போலவே இப்படத்திலும் மாஸான பி.ஜி.எம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கோட் படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.


ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்த விஜய் 


உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் ஈஸ்டர் திருநாள் ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தேவாலயங்களில் பிரார்த்தனை நடத்தப்படும். முட்டை வடிவிலான சாக்லெட்கள், முயல் உருவத்திலான சாக்லெட்கள் உள்ளிட்ட இனிப்புகளை அனைவருடனும் பகிர்ந்து இந்த நாளை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.


இந்நிலையில் ,நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். ”உலக மக்கள் அனைவரிடமும் அமைதி நிலவ, அன்பு, சகோதரத்துவம், ஒற்றுமை, தியாகம் தழைத்தோங்க, புனிதமான இந்நன்னாளில் அனைவருக்கும் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துகள்.” என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.





 தளபதி 69


கோட் படத்தைத் தொடர்ந்து விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் விஜயின் கடைசி படமாக இருக்கும். இதனால் இப்படத்தின் இயக்குநர் குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன் , அட்லீ, தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் என பல்வேறு இயக்குநர்களின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இப்படத்தை எச்.வினோத் இயக்க இருப்பது உறுதிசெய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சதுரங்க வேட்டை, தீரன் , வலிமை , துணிவு உள்ளிட்டப் படங்களை இயக்கிய எச் வினோத் சமூக அக்கறை கொண்ட கருத்துள்ளப் படங்களை எடுப்பதில் முனைப்பு காட்டுபவர் தளபதி 69 படத்தை  அவர் இயக்குவது விஜயின் அரசியல் வருகைக்கும் பலம் சேர்க்கும் விதமாக அமையும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது