பழனி கோயில் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்களுக்கு 8 ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் மினி பஸ் மற்றும் பேட்டரி கார்கள் இயக்க ஏற்பாடு செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Crime: 3 நாட்களாக மாயமான 9 வயது சிறுமி! கால்வாயில் சடலமாக மீட்பு - புதுச்சேரியில் பெரும் பரபரப்பு




ஆறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான முருக பெருமானின் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வருகை காரணமாக மலையடிவாரத்தில் நெரிசல் ஏற்படுவதாகவும், கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


Thirumavalavan: தெலங்கானா, கர்நாடகா, கேரளாவில் விடுதலை சிறுத்தைகள் போட்டி - திருமாவளவன் அதிரடி!




வழக்கை விசாரித்த நீதிமன்றம் மலை அடிவாரத்தில் கிரிவல பாதையில் வர்த்தகரீதியாக உள்ள அனைத்து கடைகளையும் அகற்றக் கோரியும், கிரிவல பாதையில் வாகனங்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டது. இதனை அடுத்து பழனி கோயில் தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு கடைகளை கண்டறிந்து அகற்றி வருகிறது. மேலும் தனியார் வாகனங்கள் கிரிவலப் பாதையில் நுழைவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.


Jharkhand Crime: நாட்டையே உலுக்கிய சம்பவம்! ஸ்பெயின் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய ஜார்க்கண்ட் அரசு!




வருகிற எட்டாம் தேதிக்கு மேல் அனைத்து தனியார் வாகனங்களும் கிரிவல பாதையில் அனுமதிக்கப்படாது எனவும், பழனி கோயிலுக்கு வரும் வாகனங்களை சுற்றுலா வாகன நிறுத்தத்தில் நிறுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் கிரிவலப் பாதையில் பக்தர்கள் செல்வதற்கு வசதியாக பேட்டரி கார்கள் மற்றும் மினி பேருந்தை இயக்கவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பக்தர்கள் கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.