அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு வழிபாடு நடத்துவதற்காகவும் நேர்த்திகடன் செலுத்துவதற்காகவும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிமாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வருவது வழக்கம். 




அப்படி நேர்த்திக்கடன் செலுத்த வருவோர்கள் கிரிவலப்பாதையில் உருண்டு கொடுத்தல், மொட்டை அடித்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்தி கடன்களை செய்து வருகின்றனர். பழனி மலையடிவாரத்தில் உள்ள ஊர் மக்கள் பெரும்பாலும் திருவிழா காலங்கள் மற்றும் கோவில் விசேஷ நாட்களில் வரும் கூட்டத்தை வைத்தே தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஏராளமான திருநங்கைகளும் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் பழனி பேருந்து நிலையம் மற்றும் அடிவாரப் பகுதிகளில், பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் பக்தர்களிடம் திருநங்கைகள் கட்டாய வசூல் செய்வதாகவும், சில நேரங்களில் பக்தர்களிடம் இருந்தும் பணத்தை பிடுங்கிக் கொண்டு சென்று விடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து பழனி டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் திருநங்கைகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் திருநங்கைகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து திருநங்கைகளின் படித்தவர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுப்பதாகவும், திருநங்கைகளின் வளர்ச்சிக்கு திருநங்கைகள் நலவாரியம் இருப்பதாகவும், அதில் சுயதொழில்களுக்காக வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.



மேலும் திருநங்கைகள் அவர்களின் வளர்ச்சி குறித்த அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டுமே தவிர, பணம் வசூல் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருக்க கூடாது என்றும் அறிவுரை வழங்கினார். மேலும் படிக்க விருப்பம் உள்ள திருநங்கைகளுக்குபடிப்பதற்கான வசதியையும் ஏற்படுத்திக் தருவதாகவும் டிஎஸ்பி சத்யராஜ் தெரிவித்தார். தொடர்ந்து பழனி வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வது பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.


 


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!


 


புலிகள் சரணாலயமான மேகமலை வனப்பகுதி - வெளியேற்றப்படும் 39 கிராம மக்கள்...!


 


H.Raja On CM Stalin : கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர்.. ட்விட்டர் ஸ்பேசஸில் பேசிய ஹெச்.ராஜா..