1. தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் புதிதாக தொழில் பூங்கா மற்றும் நவீன அரிசி ஆலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பில் புதிய தொழில் பூங்கா அமைக்க சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் 20 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.







 

2. தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதியன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள தீர்மானம் இயற்ற வலியுறுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு.செந்தில்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

 

3. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது- கடந்த 9 மாதங்களால் கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட 14 பேர் உட்பட 142 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

 

4. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2019- முதல், காணாமல் போன 110 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு  நேற்று நடைபெற்றது. அதில், திருடுபோன மற்றும் காணாமல் போன செல்போன்கள் அடையாளம் காணப்பட்டு அவரவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

5. ரவுடிகளை அடக்கி ஒடுக்க எடுத்த நடவடிக்கைகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போலவே, முதலமைச்சர் ஸ்டாலினும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவுபடுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனு அளித்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.

 

6."செய்தியாளர்களுக்கு எதிராக தவறான வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. நான் பயன்படுத்திய வார்த்தையை மத்திய அமைச் சர் வி.கே.சிங்கும் பயன்படுத்தி உள்ளார். அர்த்தம் புரியாமல் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் வருத்தமான விஷயம்தான்" - என காரைக்குடியில் செய்தியாளர் சந்திப்பின் போது ஹெச்.ராஜா தெரிவித்தார்.

 

7. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, திருப்புவனத்தில் வாடிக்கையாளர்களிடம் ஆதார் கார்டு நகல் பெறாமல் அரிவாள்களை விற்கக் கூடாது என இரும்புப் பட்டறை உரிமையாளர்களுக்கு போலீஸார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

 

8. மதுரை காமராஜர் பல்கலையில் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்க இழுத்தடிக்கப்பட்டதால் மனமுடைந்த மாணவி அங்குள்ள திருவள்ளுவர் சிலை முன் கண்களை மூடி தவப் போராட்டம் நடத்தினார்.

 

9. வேளாண் பல்கலை துணைவேந்தர் நியமன தகுதி நிர்ணயத்திற்கு எதி ரான வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.  தஞ்சாவூர் சுரேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவாகும்.


 

10.  உலக இருதய தினம் மற்றும் ஊட்டச்சத்து மாதத்தினை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. அங்கன்வாடி பணியாளர்கள் இதய வடிவில் நின்றபடி இதயத்தை பாதுகாப்பது குறித்தும், சத்தான உணவு உண்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினா். மேலும் ஜிமிக்கல் கம்மல் பாடலுக்கு நடனமாடிய படி இதயத்தை பாதுகாப்பு குறித்தும், சத்தான ஊட்டச்சத்து குறித்தும் விழிப்புணர்வு வாசகங்களை மெட்டு பாடல் பாடியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.