பழனியில் குட்கா பான் மசாலா வடமாநில தொழிலாளர்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சோதனைக்காக சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை வட மாநில தொழிலாளர்கள் தாக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு கார்த்திகை, மார்கழி, தைப்பூசத்தையொட்டி நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மேளம் தாளம், பூங்கொத்துகள், செல்போன் கவர்கள், சாமி சிலைகளை  தயாரித்து வியாபாரம் செய்வதற்காக வட மாநில தொழிலாளர்கள் பழனி அருகில் உள்ள சிவகிரி பெட்டி ஊராட்சி அலுவலகம் பகுதியில் காலியிடங்களை ஆக்கிரமித்து தற்காலிக குடிசைகளை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.


Cinema Headlines: வருத்தம் தெரிவித்த நயன்தாரா.. ஓடிடியில் வெளியாகும் சலார்.. சினிமா செய்திகள் இன்று!




Breaking News LIVE: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி


இந்நிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை உள்ளூர் வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணன் என்பவருக்கு ரகசிய  தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சோதனை செய்வதற்காக சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணனை வட மாநில தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தாக்க முயற்சித்ததாகவும், அவர் தப்பி ஓடி காவல்துறையினருக்கு, வீடியோ மூலம் வாட்ஸ் அப்பில் தெரிவித்து இருந்தார்.




இதுகுறித்து காவல்துறையினர் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சுப்பையா, ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வட மாநில தொழிலாளர்களிடமிருந்து 3 கிலோ அளவிலான குட்கா பொருட்கள் முதல் கட்டமாக பறிமுதல் செய்யப்பட்டு பெண் ஒருவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.


ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு கடும் எதிர்ப்பு.. திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு


மேலும் காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வட மாநிலத் தொழிலாளர் உள்ளூர் வியாபாரிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் தகவல் அறிந்து விசாரணைக்காக சென்ற உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியை வட மாநில தொழிலாளர்கள் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.