தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது  ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.  அவ்வாறு பழனிக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.


கொடைக்கனலில் காட்டு தீ - 500 ஏக்கரில் பரப்பளவில் அரியவகை மரங்கள் தீயில் கருகி சேதம்




கடந்த ஜனவரி மாதம் தைப் பூச திருவிழா நடந்து முடிந்த நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் நடந்தது இதில் உண்டியல்  காணிக்கை மூலம் 2 கோடியே 61 லட்சத்து 95 ஆயிரத்து 700 ரூபாய் உண்டியல் வருவாயாக கிடைத்தது இருந்தது. அதை தொடர்ந்து   நேற்றைய தினம் பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.


அதுதான் அவரோட ஆசை... இறந்த தாய்மாமனைப்போலவே மெழுகு சிலை.. நெகிழ்ச்சியான காதணி நிகழ்வு




இதில், உண்டியல் காணிக்கை மூலம் 2 கோடியே 8 லட்சத்து 76 ஆயிரத்து 878 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 167 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர உண்டியலில் தங்கம் மற்றும் வெள்ளியாலான வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில் உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 907 கிராம், வெள்ளி 11.5 கிலோ (11,690 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


Keezhadi Excavation | கீழடி : 8-ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் கிடைத்த மண்பானை.. தோண்டத் தோண்ட கிடைக்கும் அற்புதம்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண