திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி-பசுங்கிளி தம்பதியின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 21 வயதாக இருக்கும் போது விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ மற்றும் மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் இன்று நடைபெற்றது. தாய் மாமனின் மடியில் அமரவைத்து காதணி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக உள்ள நிலையில் பாண்டித்துரை இறந்து போனதால் அவரை போலவே தோற்றம் அளிக்கும் சிலிக்கன் உருவச் சிலை முன் தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது.
இதற்கு முன்னதாக பாண்டித்துரையின் சிலிக்கன் சிலை குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக திருமண மண்டபம் வந்தது அதன்பின் அவரது சிலையின் மடியில் குழந்தைகளை அமர வைத்து காதணி விழா நடைபெற்றது. இதுபற்றி பாண்டி துறையின் தாய் பசுங்கிளி கூறும்போது, அக்காள் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காதணி விழா நடைபெற வேண்டும் என்பது பாண்டித்துரையின் நீண்ட நாள் கனவு, இதனை அடிக்கடி கூறி வந்தார் இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விபத்து ஒன்றில் இறந்து போனார்.
இதில் பாண்டித்துரையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பெங்களூருவில் சிலை செய்பவரிடம் பாண்டித்துரை போலவே அச்சு அசலாக தத்துரூபமாக இருக்கும்படி சிலை செய்யச்சொல்லி இங்கு கொண்டு வந்தோம். இதன்மூலம் என்னுடைய மகனின் விருப்பம் நிறைவேறியது பேரக்குழந்தைகளுக்கும் தாய்மாமன் மடியில் அமர்ந்து காது குத்தும் வாய்ப்பு கிடைத்தது, என் மகளின் ஆசையும் நிறைவேறியது என்றார். இந்த சிலை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் செலவான நிலையில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த இந்த காதணி விழா பெரும் நெகிழ்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொடைக்கனலில் காட்டு தீ - 500 ஏக்கரில் பரப்பளவில் அரியவகை மரங்கள் தீயில் கருகி சேதம்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்