கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட  அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல்துறையும் மேற்கொண்டனர்.





கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன.





கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து கீழடியில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை நடக்கும் என தெரிவிக்கப்படடிருந்தது. இந்நிலையில் கீழடி 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்  சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது கீழடியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 



 



கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாசிகள், கற்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடை, விளையாட்டு சில்லுகள் என் ஏகப்பட்ட பொருட்கள் கிடைத்து வருகின்றனர். இந்நிலையில் கீழடியில் இரண்டு குழிகள் தொண்டப்பட்டு அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு குழியில் சுமார் 4 அடி ஆழத்தில் தோண்டும் சிதைந்த நிலையில் பெரிய வடிவிலான மண் பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றொரு குழுவில் தோன்டும் போது 4 அடி ஆழத்தில் நம் முன்னோர்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்திய செங்கற்கள் ஒரே இடத்தில் அருகே அருகே வரிசையாக கிடைத்துள்ளன.