முருக பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றம் படை வீடான பழனி முருகன் கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மாலை முதல் இன்று மதியம் வரையில் ஆவணி மாத கார்த்திகை உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரம், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி கிருத்திகை தொடங்கிய நேற்று மதியம் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், மின்இழுவை ரயில்நிலையம், படிப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
மலைக்கோவில் வெளிப்பிரகாரத்திலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு 108 விளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் உட்பிரகாரத்திலும், 7 மணிக்கு தங்கரதத்திலும் சின்னக்குமாரர் எழுந்தருளினார். அப்போது சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 150 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி! சாமியாரா..? கிரிமினலா..? யார் இந்த ’மிரட்டல்’ பரமஹம்ஸா?