திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு உட்பட்ட கிரிவலப் பாதை 1948 ஆம் ஆண்டு பழனி நகராட்சி நிர்வாகத்தால் பராமரிப்பு பணிகளுக்காக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகள் அகற்றவும், கிரிவலப் பாதையில் எந்த விதமான வாகனங்கள் செல்லவும் தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த கிரிவலப் பாதைகளை ஆக்கிரமிப்புகள் அகற்றவும் ஆய்வு செய்யவும் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.


PM Modi: சக்சஸ், கிராண்ட் சக்சஸ்..! ரஷ்யா, ஆஸ்திரியா பயணங்களை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி




இதனால் அடிவாரம் பகுதியிலிருந்து 150 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கான சிறு, குறு சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தன் போராட்டத்தில் ஈடுபட்டார்.


Gautam Gambhir: கோடிகளில் சம்பளம் மட்டுமல்ல..! பயிற்சியாளர் கம்பீருக்கு சலுகைகளை அள்ளி வீசும் பிசிசிஐ




தொடர்ந்து பழனி நகராட்சி கூட்டத்திலும் திருக்கோவிலுக்கு எதிராக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. தற்போது பழனி கோயில் நிர்வாகத்தை கண்டித்து நகர்மன்றம் சார்பில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் குழுவினர் ஆய்வு செய்ய வருகை தர உள்ளனையில் அன்றைய தினத்தில் பழனியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.


TN Fishermen Arrest: காலையிலேயே அதிர்ச்சி..! தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை


இதில்  தேவஸ்தான நிர்வாகம் நகராட்சி உரிமைகளில் தலையிடுவதாகவும், பழனி நகராட்சிக்கு சொந்தமான சாலைகளை தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்வதாகவும் அரசாணை எண் 3324 31.08.1974 பத்தி 5ல் பிரிவு 3  மற்றும் 4 நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் , ரயத்து பட்டா வைத்துள்ள விவசாயிகள் இந்த கிரிவல பாதை வழியாக விவசாய இடுபொருட்களை கொண்டு செல்ல அரசாணையில் உள்ளது என்றும், பழனி நகராட்சிக்கு சொந்தமான கிரிவிதி கோவில் பராமரிப்புக்காக வழங்கப்பட்டது.




TN Fishermen Arrest: காலையிலேயே அதிர்ச்சி..! தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை


ஆனால்,  கிரிவல வீதியை மீண்டும் நகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும், பழனி உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வியாபாரிகளை தொந்தரவு செய்கின்றனர்.  இதனால்  பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.