புகார் எண்ணுக்கு தகவல் தெரிவித்தால் வாகன சாகசத்தில் ஈடுபடுபவர், மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆபத்தான வீலிங் சாகசங்கள்


தமிழகத்தில் தொடர்ந்து பள்ளிக், கல்லூரி மாணவர்கள் விலை உயர்ந்த பைக்குகளில் சாலைகளில் வீலிங் செய்வது சாகசத்தில் ஈடுபடுவது, வண்ண வெடிகளை, வீலிங் செய்தபடி வெடிக்கச் செய்வது என்பது போன்று உயிருக்கு ஆபத்தான சாகசங்களை செய்து வருகின்றனர். அதோடு அதனை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். தங்களுக்கு வரும் லைக்குகளுக்காக ஆபத்து என்பதை உணராமலும் மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். வீலிங் சாகசங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இது தொடர் கதையாகி வருகிறது. 


- கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு


நடவடிக்கை எடுக்கப்படும்


மேலும் மாணவர்களின் இந்த சாகசத்தால் சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதால்  காவல்துறையினர் பைக் ரேஸில் ஈடுபடுவதை தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். அது மட்டுமின்றி சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் சமூக வலைதளத்தில் பைக் வீலிங் மற்றும் சாகசம் தொடர்பாக வீடியோவை வெளியீடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் பைக் வீலிங் செய்ததாக இருவரின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் சர்கஸ் சாகசம் செய்யும் இளைஞர்கள் தொல்லை சாலையில் செல்லும் நபர்களுக்கு உள்ளது. இந்நிலையில் மதுரை மாநகர் பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் வண்ணம் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று புகார் எண் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எளிமையாக புகார் அளிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


புகார் எண் அறிவிப்பு


மதுரை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில்...,” பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வண்ணம் இருசக்கர வாகன சாகசத்தில் (Bike Racing, Rash Driving, Wheeling) ஈடுபடுபவரை கண்டால் அந்த இருசக்கர வாகனத்தை வாகன எண்ணுடன் Photo அல்லது Video எடுத்து 88000-21100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவித்தால் வாகன சாகசத்தில் ஈடுபடுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” அதில் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - திருமணம் முடிந்த கையோடு வாக்களித்த மணப்பெண் - விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுவாரஸ்யம்


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சுரங்க கால்வாயில் விழுந்த குட்டி யானை - தண்ணீரை நிறுத்தி உயிருடன் மீட்ட தமிழக அதிகாரிகள்