நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். அதேபோல் வெளியூர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளில் தீபாவளியை கொண்டாடவும் மக்கள் செல்வது வழக்கம். மேலும் நாளை மற்றும் நாளை மறு நாளான தீபாவளி பண்டிகைக்கு முன்பு சனி, ஞாயிறு என அடுத்தடுத்து 2 விடுமுறை நாட்கள் வருகின்றன. அதனால் தீபாவளியை கொண்டாடுவதற்கு மக்கள் முன்கூட்டியே வெளியூருக்கு செல்ல தொடங்கிவிட்டனர்.
Gold, Silver Price : ஹாப்பி நியூஸ்..! சென்னையில் இன்று சரிந்த தங்கம் விலை...!
அதேநேரம் வெளியூர் பயணம் என்றாலே ரயில், பேருந்துகளில்தான் மக்கள் அதிகம் செல்கின்றனர். ஆனால் ரயிலில் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விடுவார்கள். இதனால் கடைசி நேரத்தில் செல்வோர் முன்பதிவு இல்லாத இடங்களில் பயணிக்கும் நிலை உள்ளது.
அரசு பேருந்துகளில் பார்சல் வசதி சேவை அமல்படுத்தப்படும் - அமைச்சர் சிவசங்கர்
இதனால் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தீபாவளியை முன்னிட்டு நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மட்டும் 24 பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதை தவிர திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் உலகப்புகழ்பெற்ற ஆன்மீக பகுதியான பழனி, சுற்றுலாதலமான கொடைக்கானலுக்கு அதிக அளவில் மக்கள் வருகை அதிகரிக்கும். இந்த பகுதிகளில் உள்ள ஊர்களுக்கும் வழக்கத்தைவிட கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஐதராபாத் நகைக்கடைகளில் அமலாக்கத்துறை சோதனை ! ₹149.10 கோடி நகை மற்றும் ₹1.96 கோடி பணம் பறிமுதல்!
இதன்மூலம் மொத்தம் 200 அரசு பேருந்துகள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு பேருந்துகள் வருகிற 26-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளன. மேலும் பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க முக்கிய பேருந்து நிலையங்களில் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்