தேனி மாவட்டத்தில் 2 இடங்களில்  என்ஐஏ  அதிகாரிகள் நள்ளிரவில் சோதனையில் ஈடுபட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மண்டல செயலாளர் யாசர் அராஃபத் கைது செய்யப்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் தேனியில் பதற்றம் நிலவி வருகிறது.


Popular Front Of India : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை.. எந்தெந்த இடங்கள்?


NIA என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இரண்டு குழுக்களாக பிரிந்து இன்று தேனி மாவட்டம் கம்பம் மற்றும் தேனி அருகே உள்ள முத்துத்தேவன்பட்டியில் உள்ள அறிவகம் என்னும் இஸ்லாமிய மதரசா கல்லூரியிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் முத்துதேவன்பட்டியில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை NIA அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.


Ashes 2023 : அடுத்த ஆண்டு இங்கிலாந்து அணி ரொம்ப பிஸி... ஆஷஸ் முதல் அயர்லாந்து தொடர் வரை அட்டவணை வெளியீடு!




இதனைத் தொடர்ந்து அங்கு குவிந்த இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கம்பத்தில் நடைபெற்ற சோதனையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மண்டல செயலாளர் யாசர் அராபத் என்பவரை கைது செய்து கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரிடமிருந்தும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த தகவல் அறிந்த பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் கம்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Watch Video : “தாய்மை வாழ்கென” : நீலகிரியில் தாயைப் பிரிந்த குட்டி யானை.. சேர்த்து வைத்த வனத்துறையினர்.. நெகிழ்ச்சி வீடியோ




இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. முன்னதாக NIA அதிகாரிகளின் சோதனையையொட்டி கம்பம் நகரில் நூற்றுக்கணக்கான போலீசார் நேற்று நள்ளிரவில் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் முத்துதேவன்பட்டியலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஹைதராபாத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்ததாக குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளன. முத்துத்தேவன்பட்டியில் உள்ள அறிவகம் என்னும் இஸ்லாமிய மதரசா கல்லூரியில் இதற்கு முன்னர் இரண்டு முறை NIA அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Japan Typhoon : ஜப்பானை மிரளவைத்த நான்மடோல் புயல்: வைரலாகி பயமுறுத்தும் மிரட்டல் வீடியோ..


தேனி மாவட்டத்தில் இதற்கு முன்னர் என்.ஐ.ஏ. சோதனைகள் நடைபெற்றுள்ளன என்றாலும் நள்ளிரவில் சோதனை நடத்தப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். கம்பம் நகரில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.