கிழக்காசிய நாடான ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கியூஷூ தீவை 'நான்மடோல்' என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.


மின்கம்பங்கள் தொடங்கி கட்டிடங்கள் வரை புயல் பாரபட்சமின்றி பெரும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை புயல் வாரிசுருட்டி வீசியது. கடலில் பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பின. புயலின் காரணமாக சூறாவளி காற்றுடன் கனமழையும் கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உடனடியாக வெள்ளம் சூழந்தது. புயல் மழை என்றால் வெள்ளத்தப் பற்றிச் சொல்லவா வேண்டும். கியூஷூ தீவின் முக்கிய நீர்நிலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. புயல், மழையைத் தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது.  குடிநீர் விநியோகம், தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் தடைப்பட்டுள்ளன. இந்த புயலால் ஒருவர் உயிரிழந்ததாகவும், 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 






புயல், மழை மற்றும் வெள்ளத்தால் கியாஷூ தீவில் உள்ள பல்வேறு நகரங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக கியாஷூ தீவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், படகு போக்குவரத்து மற்றும் புல்லட் ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. 


இதனிடையே நான்மடோல் புயல் கரையைக் கடந்து அதன் கண் பகுதி கடக்கும் போது நிலவும் இறுக்கத்தை ஒருவர் வீடியோவாக எடுத்துப் பகிர்ந்துள்ளார். ரெனால்ட்ஸ் என்பவர் தான் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். புயலின் கண்ணின் நடுவே என்று அதற்கு தலைப்பிட்டுள்ளார். ககோஷிமா பகுதியில் இபுசுகி எனுமிடத்தில் புயலின் கண் நகர்ந்த போது நிலவிய அழுத்தமான சூழலை அவர் பகிர்ந்துள்ளார். காற்று என்பதே இல்லை. லேசான மழை உள்ளது. என் காதுகளில் வழி ஏற்படும் அளவுக்கு காற்று இல்லாமல் இருக்கிறது. காற்றின் அழுத்தம் 940.6hPa என்றளவில் உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.


புயலின் கண் என்றால் என்ன?
இது கடுமையான வெப்பமண்டல சூறாவளியின் மையத்தில் கிட்டத்தட்ட வட்டமான சமச்சீர் பகுதி. அதில் ஒரு தெளிவான வானம் பார்க்கப்படுகிறது, மற்றும் சமச்சீர் அச்சில், காற்று ஒளி. இதன் விட்டம் 8 முதல் 200 கிமீ வரை இருக்கும், இருப்பினும் பெரும்பாலானவை பொதுவாக 30 முதல் 60 கிமீ வரை இருக்கும். மேற்பரப்பு மட்டத்தில் மிகக் குறைந்த அழுத்தம் அங்கு பதிவு செய்யப்படுகிறது, மேலும் அதிக வெப்பநிலை நடுத்தர வெப்பமண்டலத்தில் உள்ளது.  புயலுக்கு வெளியே சுற்றுப்புற வெப்பநிலையை விட 10 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.