மதுரை ஹாஜிமார் தெரு பகுதியில் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை.
கோவை சம்பவம்
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு, கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
என்.ஐ.ஏ., சோதனை
சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கு மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கு தொடர்பால இந்த சோதனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
- Box office Collections: மாஸ் காட்டியது லால் சலாமா? லவ்வரா? - முதல் நாள் வசூல் நிலவரம் இதோ!
மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியில் உள்ள சாமியார் சந்து பகுதியில் வசித்துவரும் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரான அலிஜிகாத் (எ) முகமது அபுதாஹிர் என்பவரது வீட்டில் NIA அதிகாரிகள் இன்று காலை 8 மணி முதல் சோதனையை நடத்திவருகின்றனர். அதிகாலை 6 மணியளவிற்கு NIA அதிகாரிகள் வருகை தந்த நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் காலை 8 மணிக்கு மேல் ஜிகாத் அலி வீட்டிற்கு வந்த நிலையில் சோதனையை தொடங்கி நடத்திவருகின்றனர் இவரிடம் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏதேனும் தொடர்பு உள்ளதா ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. NIA அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Bus Accident: காலையிலேயே அதிர்ச்சி சம்பவம்.. சென்னையில் இருந்து சென்ற பேருந்து மீது லாரி மோதி 7 பேர் உயிரிழப்பு
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - UAE's Hindu Temple: பிரதமர் மோடி திறந்து வைக்கும் இந்து கோயில்! அபுதாபியில் ஏற்பாடுகள் மும்முரம்!