அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலம் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் நிலையில் திருக்கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு  உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு திருக்கோவில் ஊழியர்கள் வைத்து ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தைப்பூசத் திருவிழா முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பிரசாதங்கள் அனைத்தும் இன்று வரை பஞ்சாமிர்தங்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளது.




கெட்டுப்போன பிரசாதங்கள்:


இதனை கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இரவு பகலாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் கெட்டுப் போன பிரசாதங்களை பக்தர்கள் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள்  15 நாட்களுக்குள் விற்கப்பட வேண்டிய நிலையிலும் , லட்டு ,முறுக்கு,  அதிரசம் போன்ற பிரசாதங்கள் தயாரிப்பு தேதி இல்லாமலும் விற்கப்படுவதால் கெட்டுப்போன வாசனை அடிப்பதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பிரசாதங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள், பக்தர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தனர்.   பழனி உணவுத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகிகள் தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.




அதிகாரிகள் அதிரடி ஆய்வு:


கடந்த 26 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள்  15 நாட்களுக்குள் விற்கப்பட வேண்டிய நிலையிலும், லட்டு, முறுக்கு,  அதிரசம் போன்ற பிரசாதங்கள் தயாரிப்பு தேதி இல்லாமலும் விற்கப்படுவதால் கெட்டுப்போன வாசனை அடிப்பதாகவும் பக்தர்கள் மற்றும் ஞான தண்டாயுதபாணி சுவாமி பக்தர்கள் பேரவை செந்தில் குமார் குற்றம் சாட்டினார்.




இதனால் பிரசாதங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள், பக்தர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தனர்.   பழனி உணவுத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகம் சார்பில்  தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பத்திரிகையாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டதற்காக  பொய் செய்தி என பத்திரிக்கை செய்தி கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டனர்.


இதனையடுத்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையங்களில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கலைவாணி தலைமையில் ஏழு அதிகாரிகள் கெட்டுப்போன பிரசாதம் விற்பனை செய்ததாக கூறப்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கண்டனர். அப்போது லட்டு என்ணெய் சிக்கு வாடை அடிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். லட்டு காய்ந்து விட்டதாகவும் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்கிறோம் என்றும் தெரிவித்தனர்.



அப்போது பஞ்சாமிர்தக் குடோனை ஆய்வு செய்யாமல் பிரசாதங்கள் தயாரிக்கும் நிலையத்தை மட்டும் ஆய்வு செய்தனர். அப்போதும் கூட பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதி இல்லை என்றும், ஒரு சிலர் மட்டும் வரலாம் என்றும் பழனி காவல் கண்காணிப்பாளர் சுப்பையா தெரிவித்தார். இதனை அடுத்து மூன்று செய்தியாளர்கள் மட்டும் உள்ளே சென்றனர். உள்ளே சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேக்கிங் செய்யும் கவர்கள் மாற்றப்பட வேண்டும் என்றும், எண்ணையை நன்றாக வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.  மேலும் காலாவதி தேதி பதிவு செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து சென்றனர்.