நியோமேக்ஸ் மோசடி வழக்கில்,  நியோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் கமலக்கண்ணன் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவருக்கும் வரும் 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.



 

நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் மதுரை  பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததன் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான  வீரசக்தி கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். 

 




 

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாக இயக்குநர்கள் ஒருவரான கமலக்கண்ணன் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை காவல்துறையினரால் சென்னையில் கைது செய்யப்பட்டனர். தமிழக முழுவதும் நியோ மேக்ஸ் வழக்கில்  ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மோசடி வழக்கு 92 பேர் வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 752 வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் அதன் மதிப்பு 17.25 கோடியாகும்.  மேலும் இந்த நிறுவனம் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்கள் பறிமுதல்  செய்யப்பட்டு முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை பாதிக்கப்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருக்கிறார்கள். இந்த வழக்கு விசாரணை தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இதன் முக்கிய நிர்வாகியான கமலக்கண்ணன் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.



 

மேலும் இது தொடர்பாக மீதம் உள்ளவர்களை விரைந்து கைது செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களுக்கு சைமன் ராஜா, கபீல், பத்மநாபன், இசக்கிமுத்து, சகாயராஜ் ஆகிய 5 பேர் நிபந்தனை ஜாமினில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர் என்பதும், நியோ மேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர்களான வீரசக்தி, மற்றும் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் ஆகிய மூவரின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றத்தை ரத்து செய்ததும் குறிப்பிடதக்கது. 



 

இந்த மூவரும் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்த நிலையில் நியோமேக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான கமலகண்ணன் மற்றும் அவரது சகோதரர் சிங்காரவேலன் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இன்று மதுரைக்கு அழைத்துவரப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் நீதிபதி தமிழரசி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இருவருக்கும் வரும் செப்டம்பர் 29ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.