142 அடி நீர்மட்டத்தை எட்டவுள்ள முல்லை பெரியாறு அணை - தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி!

’’முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 140.35 (142) அடியாகவும் நீர் இருப்பு 7221 கன அடியாகவும், நீர்வரத்து 3,378 கன அடியாகவும் உள்ளது’’

Continues below advertisement

தமிழக-கேரள இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் நீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 155 அடி ஆகும் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரலாற்று மிக்க சிறப்பு தீர்ப்பு அளித்தது.

Continues below advertisement


இதனை தொடர்ந்து அணையில் இதுவரையில் 3 முறை 142 அடி வரையில் தண்ணீர் தேக்கப்பட்டது. கடந்த மாதம் முல்லை பெரியாறு  நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழையால் அணையின் நீர் மட்டம் விரைவாக உயர தொடங்கியது. இந்த நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி கேரள நீர்பாசன துறை அமைச்சர் ரோஸின் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் தமிழகத்திற்கு தெரியாமல் அணையில் 136 அடி இருக்கும் போதே தண்ணீரை திறந்து விட்டதாக புகார் எழுந்தது. இதற்கு பதில் அளித்த தமிழக நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் Rule Curve விதிமுறைப்படிதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது என பதிலளித்தார்.


தற்போது முல்லை பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால் கடந்த சில தினங்களில் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயரத்தொடங்கி தற்போது 140.35 அடியை எட்டியுள்ளது. அணையில் 142 அடி தண்ணீர் தேக்கிக்கொள்ள Rule curve  விதிமுறைப்படி அனுமதி உள்ள நிலையில் தற்போது முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் மட்டம் உயரவுள்ளதால் தமிழக விவசாயிகள் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் Rule curve விதிமுறைப்படி அணை மற்றும் பாதுகாப்பு கருதி எந்த நேரத்திலும் அணையிலிருந்து தண்ணீரை திறக்கலாம் எனவும் உத்தரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.


இன்றைய நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் நீர்  14.35 (142) அடியாகவும்  நீர் இருப்பு 7,221 கன அடியாகவும், நீர் வரத்து 3,378  கன அடியாகவும், நீர் திறப்பு 2,700 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணையில் நீர்வரத்து தற்போது 142 அடியை எட்டவுள்ளது குறிப்படத்தக்கது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola