கல்வி பயின்றதால் அப்பா சொத்தில் இருந்து ஒரு காசு கூட எடுக்காமல் பல்துறைகளில் பணியாற்றி கோடீஸ்வரன் ஆனேன், வெளிநாடுகளில் கல்வி பயின்றாலும் இந்தியாவுக்கு திரும்பி மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன் என மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு


அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்


மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரம் பகுதியில் உள்ள திரு.வி.க மாநகராட்சி  மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சீருடைகள் ஆகியவற்றை வழங்கினார். பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேடையில் பேசுகையில் "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வியும், சுகாதாரத்தையும் இரண்டு கண்களாக பாவித்து பணியாற்றி வருகிறார். மாணவ - மாணவிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்திய அளவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக திகழ திராவிட இயக்கம் காரணமாகும். கல்வி முன்னேற்றத்திற்காக தனது சொத்தை தானமாக கல்விக் கொடையாளர் ராஜேந்திரன் வழங்கி உள்ளார். கல்விக் கொடையாளர் ராஜேந்திரன் போல மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.


- Ramanathapuram: சுரங்கப்பாதை பணியை முடிக்க லாந்தை கிராம மக்களுடன் ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை


ஒரு காசு கூட எடுக்காமல்


தாத்தா, தந்தை, நான் என அனைவருமே மக்கள் சேவையாற்றவே அரசியலுக்கு வந்தோம், கல்வி பயின்றதால் அப்பா சொத்தில் இருந்து. ஒரு காசு கூட எடுக்காமல் பல்துறைகளில் பணியாற்றி கோடீஸ்வரன் ஆனேன். வெளிநாடுகளில் கல்வி பயின்றாலும் இந்தியாவுக்கு திரும்பி மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன். கல்வியை யாராலும் பறிக்க முடியாது. கல்வி அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். திராவிட இயக்கத்தின் கொள்கை கல்விதான் முக்கியம் அடுத்த தலைமுறைதான் எங்கள் எதிர்காலம் என்று உணர்ந்து உங்களுக்கெல்லாம், எந்தெந்த வகையில் ஊக்கமும் உதவியும் செய்ய முடியுமோ, முதலமைச்சர் எல்லா அமைச்சர்களுக்கும் இதை தான் முதல் இலக்காக கொடுத்திருக்கிறார். இந்த அடிப்படையில் தான் இரண்டு நாட்களுக்கு முன் நானும் சென்னையில் சுமார் 80 கோடி ரூபாய் அளவிற்கு பல பத்தாயிரம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் வகையில் பயிற்சி கொடுப்பதற்கு, ஐசிடி அகாடமி என்ற ஒரு நிறுவனம் என் துறையில் இரண்டு வருடத்தில் ஒப்பந்தங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பணியில் இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் தலைமையில் பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்" என பேசினார்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rahul-Priyanka: ”எனது தந்தை இறந்தபோது அடைந்த துக்கத்தை மீண்டும் அடைந்துள்ளேன்” - ராகுல் காந்தி


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Paris Olympics 2024: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கம் - ஸ்வப்னில் குசலே அசத்தல்