Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல், பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை இந்த ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த நிலையில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சுவப்னில் குசலே நம்பிக்கை அளிக்கும் விதத்தில் செயல்பட்டார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் போட்டியில் தகுதிச்சுற்றுகளில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். இந்த நிலையில், இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், தொடக்கம் முதலே சீன வீரர், உக்ரைன் வீரர் ஷெரிய் மற்றும் இந்திய வீரர் சுவப்னில் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்தியாவிற்கு 3வது பதக்கம்:
இதில் சிறப்பாக ஆடிய யூகுன் லியூ தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார். அவர் 463.6 புள்ளிகளை கைப்பற்றி தங்கத்தை வென்றார். உக்ரைன் நாட்டின் ஷெரிய் 461.3 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீரர் சுவப்னில் குசலே 451.4 புள்ளிகளை கைப்பற்றி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.
தங்கப்பதக்கத்தை கைப்பற்றாவிட்டாலும் இந்தியாவிற்காக வெண்கலத்தை வென்று அசத்தியுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை வென்ற 3 பதக்கங்களும் துப்பாக்கிச்சுடுதலில் கிடைத்துள்ளது. மேலும், 3 பதக்கங்களும் வெண்கலப் பதக்கமும் ஆகும்.
குவியும் வாழ்த்து:
நார்வே வீரர் ஜான் – ஹெர்மன் ஹெக், ப்ரான்ஸ் லூகாஸ் பெர்னார்ட், போலந்து வீரர் டோமஸ்ச் பர்ட்னிக், செர்பிய வீரர் லேசர் கோவேசேவிக் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச்சுடுதலில் வெண்கலம் வென்ற சுவப்னில் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக உள்ளார்.
இந்த ஒலிம்பிக்கில் இதுவரை இரண்டு வெண்கலப்பதக்கங்களை மனுபாகர் வென்றுள்ளார். 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் வெண்கலம் வென்ற மனுபாகர், கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டலிலும் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மனு வெண்கலம் வென்றார். வெண்கலப்பதக்கம் வென்ற சுவப்னில் குசலேவிற்கு சக வீரர்களும், நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Paris Olympics 2024: சீனாவின் தங்க வேட்டை, ஒலிம்பிக் பதக்கப் பட்டியல் நிலவரம் - இந்தியர்களுக்கான இன்றையை போட்டிகள்
மேலும் படிக்க: Olympics Boxing: ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை: லவ்லினா காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்