சென்னையில் வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான அரிசி, பிஸ்கட், பிரட் மற்றும் அத்தியாவசிய உள்ளிட்ட 8 டன் நிவாரண பொருட்களை இஸ்லாமிய நல கூட்டமைப்பினர் சேகரித்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.


Meftal Drug: மாதவிடாய் வயிற்று வலிக்கு இந்த மருந்தை பயன்படுத்தறீங்களா? எச்சரிக்கை விடுத்த ஐபிசி




மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி கரம் நீட்டும் வகையில் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவி கரங்களை நீட்டி மக்களுக்கு தேவையான உணவு, பால், குடிநீர் உள்ளிட்ட பொருட்களை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.


Mahua Moitra: ’ நாளை என் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் வருவார்கள்’ - பதவி பறிப்பிற்கு பின் பேசிய மஹுவா மொய்த்ரா




இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமிய நல கூட்டமைப்பின் சார்பாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக, வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் நிவாரண பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சேகரிக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி குடிநீர், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் நாப்கின் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள், மற்றும் போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய 8 டன் நிவாரண பொருட்களை லாரியில் ஏற்றி சென்னைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.


Latest Gold Silver Rate: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 560 குறைவு.. இன்றைய நிலவரம் இதோ..




நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் மற்றும் பெரியகுளம் இஸ்லாமியர் நல கூட்டமைப்பினர் சேர்ந்து கொடி அசைத்து அனுப்பி வைத்தனர். மேலும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சென்னையில் வாங்கி இங்கிருந்து கொண்டு செல்லும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுடன் சேர்த்து வெள்ள பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு, இதுவரையில் எந்த நிவாரணமும் கிடைக்காத மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இங்கிருந்து இஸ்லாமிய நல கூட்டமைப்பின் சார்பாக 10க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இந்த வாகனத்துடன் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.


Director Ameer : நான் பெற விரும்புவது யாசகம் அல்ல, என் உரிமை - இயக்குநர் அமீர் வெளியிட்ட அதிரடி அறிக்கை..




Director Ameer : நான் பெற விரும்புவது யாசகம் அல்ல, என் உரிமை - இயக்குநர் அமீர் வெளியிட்ட அதிரடி அறிக்கை..


மேலும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள நீரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கேட்டவுடன் உதவிக் கரங்களை நீட்டிய அனைத்து சமுதாய மக்களுக்கும் இஸ்லாமிய நல கூட்டமைப்பினர் தங்களது நன்றியை தெரிவித்து, நிவாரண பொருட்களை ஏற்றி சென்ற லாரிக்கு முன்பாக நின்று தங்கள் மத வழிபாடுகளை நடத்தி சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வழி அனுப்பி வைத்தனர்.